கிருஷ்ணகிரி மாவட்டம் பழையம்பேட்டையில் உள்ள பட்டாசு குடோனில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 9 பேர் உயிரிழந்தனர். மேலும், 15 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கிருஷ்ணகிரி பட்டாசு குடோனில் ஏற்பட்ட வெடி விபத்துக்கான காரணம் குறித்து அமைச்சர் சக்கரபாணி விளக்கம் அளித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பழையம்பேட்டையில் உள்ள பட்டாசு குடோனில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 9 பேர் உயிரிழந்தனர். மேலும், 15 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த வெடி விபத்தால் 5 கடைகள் தரைமட்டமானது. வெடி விபத்து நிகழ்ந்த இடத்தை மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்.பி. ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
இதையும் படிங்க;- பட்டாசு ஆலை விபத்தில் 9 பேர் பலி..! பிரதமர் மோடி, முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்... நிவாரண உதவி அறிவிப்பு
இந்நிலையில், விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருபவர்களை தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி ஞாயிற்றுக்கிழமை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். பின்னர், அவர்களுக்கான நிவாரண உதவிகளை வழங்கினார்.
இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் சக்கரபாணி;- கிருஷ்ணகிரி பட்டாசு கடை வெடி விபத்துக்கு அருகிலிருந்த உணவத்தில் சிலிண்டர் வெடித்ததேத காரணம். சிலிண்டர் வெடித்ததுதான் பட்டாசு கடை விபத்திற்கு காரணம் என தடவியல் துறை அறிக்கை அளித்துள்ளது.
இதையும் படிங்க;- மதக்கலவரத்தை தூண்ட முயற்சிக்கும் மமக! கொதிக்கும் பாஜக! வருத்தம் தெரிவித்த ஜவாஹிருல்லா! நடந்தது என்ன?
எனினும் தற்போது கிருஷ்ணகிரி முழுவதும் உள்ள பட்டாசு குடோன்கள் கண்காணித்து உரிய ஆவணங்கள் இருக்கிறதா, பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறோம் என அமைச்சர் சக்கரபாணி கூறியுள்ளார்.