இராமநாதபுரத்தில் பிரதமர் மோடி அல்ல, எப்பேற்பட்ட ஜாம்பாவான் போட்டியிட்டாலும் தோல்வி அடைவது உறுதி- சேகர்பாபு

By Ajmal Khan  |  First Published Jul 30, 2023, 12:53 PM IST

இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் பிரதமர் மோடி உட்பட எப்பேற்பட்ட ஜாம்பாவான் போட்டியிட்டாலும் தோல்வியை பரிசாக வழங்குவோம் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். 


 கோயிலின் தீட்சிதர்களால் பக்தர்களுக்கு துன்பம்

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, சென்னை துறைமுகம் தொகுதிக்குட்பட்ட தங்கசாலையில், 130 கர்ப்பிணி பெண்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய், மற்றும் ஊட்டச்சத்து பொருட்கள் உள்ளிட்டவைகளை அமைச்சர் சேகர்பாபு, முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா, உள்ளிடோர் வழங்கினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, சிதம்பரம் நடராஜர் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை எவ்வித அதிகார துஷ்பிரயோகமும் செய்யவில்லை எனவும்,  கோயிலின் தீட்சிதர்களால் பக்தர்களுக்கு துன்பம் ஏற்படும் போது அறநிலையத்துறை தலையிட வேண்டியுள்ளதாக கூறினார். 

Tap to resize

Latest Videos

பா.ஜ.க தகரம்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எத்தனை பாதயாத்திரை மேற்கொண்டாலும் புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி உறுதி எனவும், இராமநாதபுரம் தொகுதியில் பிரதமர் மோடி அல்ல, எப்பேற்பட்ட ஜாம்பாவான் போட்டியிட்டாலும் தோல்வியை திமுக பரிசாக வழங்குவோம் என கூறினார்.  தமிழகத்தில் திமுகவுக்கும் பா.ஜ.க.வுக்கும் இடையே தான் போட்டியா என்ற கேள்விக்கு, திமுக என்பது தங்கம். பா.ஜ.க தகரம். தங்கத்தை எப்போதும் தகரத்தோடு ஒப்பிடாதீர்கள் என சேகர்பாபு பதிலளித்தார்.

இதையும் படியுங்கள்

கட்டுக் கட்டாக லஞ்சம்...! தேனி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் மீனாட்சி சுந்தரத்தின் ஷாக்கிங் வீடியோ

click me!