
ஓஹோ...."இதை" கண்டுபிடிக்கதான் இந்த சோதனையா ? ஆவணங்கள் முக்கியமில்லை...இதுதான் முக்கியமாம்.....
பரபரப்பிற்கு பஞ்சமே இல்லாத ஒரு மாநிலம் தமிழ்நாடு என்று சொல்லலாம் ...அரசியல் சூழ்நிலை முதல் போராட்டம், சாலை மறியல் என தொடர்ந்து டெங்கு வரை தினம் தினம் ஏதோ ஒன்று பற்றி பரபரப்பாக பேசப்படும்..
இந்நிலையில் மீண்டும் மாபெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது வருமானவரி சோதனை
இன்று அதிகாலையிலிருந்து சசிகலாவின் குடும்பத்தினர் நிறுவனங்கள், உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு சொந்தமான 160 கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நிகழ்த்தி வருகின்றனர்.
இது மட்டுமில்லாமல், ஆந்திரா,பெங்களூரு உள்ளிட்ட 27 இடங்களிலும் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த சோதனைக்கு பின் வேறு ஒரு காரணம் உள்ளதாம். அதாவது சோதனையின் போது ஆவணங்களை கைப்பற்றுவதை விட சிடி தான் முக்கியமாம்...
அதாவது இது ஒரு வீடியோவுக்காக நடத்தப்படுவதாகவும் அரசியல் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது அவர் சசிகலாவுடன் பேசிய வீடியோ ஒன்று தங்களிடம் உள்ளதாக திவாகரனின் மகன் ஜெயானந்த் சில நாட்களுக்கு முன் கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்காகத்தான் தற்போது இந்த வருமான வரித்துறை சோதனை நடந்து வருவதாக கூறப்படுகிறது. அந்த சர்ச்சை வீடியோவை வெளியிட்டால் பலருடைய சாயம் வெளுத்துவிடும் எனவும், அதனை விரைவில் வெளியிட உள்ளதாகவும் திவாகரன் மகன் ஜெயானந்த் கூறியிருந்தார். இந்த சூழலில் திவாகரன் வீட்டிலும் தற்போது வருமான வரித்துறை சோதனை நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
வீடியோ எங்கெல்லாம் இருக்கும் என்ற நோக்கத்துடன் தேடபடுவது போலவே, தண்ணீர் தொட்டியும், சொகுசு கார்களிலும் குறிப்பிட்ட சில வீடுகளிலும் அதிக முக்கியத்துவம் கொடுத்து தேடப்படுவது போலவே சோதனை நடைபெற்று வருவாதல், ஒரு வேளை இதற்காகத்தான் இந்த அதிரடி சோதனை நடைபெற்று வருகிறதோ என்ற கேள்வியும் எழுந்துள்ளது