கோவையில் குண்டு வீச்சு சம்பவம்.. நடந்தது இதுதான் - உண்மையை உடைத்த அமைச்சர் செந்தில் பாலாஜி !

By Narendran SFirst Published Sep 25, 2022, 10:48 PM IST
Highlights

கோவையில் மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாதவாறு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து வருவதாக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.

கோவையில் மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாதவாறு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து வருவதாக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். உலக பிசியோதெரபி தினத்தையொட்டி தமிழ்நாடு பிசியோதெரபி மருத்துவர்கள் சங்கம் சார்பில் விருது வழங்கும் விழா இன்று கோவையில் நடைபெற்றது. உலக பிசியோதெரபி தினத்தையொட்டி கோவை மண்டல அளவிலான அறிவியல் மையம் மற்றும் அறிவியல் அருங்காட்சியத்தில் தமிழ்நாடு பிசியோதெரபி மருத்துவர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற விருதுகள் வழங்கும் விழாவில் தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கலந்துகொண்டார்.

இதையும் படிங்க: திமுகவின் அடுத்த தலைவர் யார் ? அடுத்தடுத்து காத்திருக்கும் சம்பவங்கள் !!

பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ‘பிசியோதெரபி சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். அதை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்  மூலம் முதல்வரின் கவனத்துக்கு கொண்டு அவற்றை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் கோவையில் பாஜகவினர் எதற்காக கைது செய்யப்பட்டார்கள் என்றால், குறிப்பாக அவர்கள் சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டுள்ளனர். அவர்களுக்கான கோரிக்கைககள் இருந்தால் மாவட்ட ஆட்சியர் அல்லது காவல் துறை அதிகாரிகளிடம்  முன் வைக்கலாம். 

இதையும் படிங்க: நான் வேற கட்சியில் இணைய போகிறேன், அதிமுக கிடையவே கிடையாது - சுப்புலட்சுமி ஜெகதீசன் சொன்ன சீக்ரெட்!

ஆனால் அதை விட்டு விட்டு சாலை மறியலில் ஈடுபடுவது சட்டம் - ஒழுங்கை சீர்குலைப்பதில் ஈடுபட்டவர்களை மட்டுமே காவல் துறையினர் கைது செய்துள்ளனர். சமூக வலைதளங்களில் கோவையில் ஏதோ ஒரு  பதற்றமான சூழ்நிலை நிலவுவது போல தகவல்கள் பரவுகின்றன. கோவையில் எந்த அசம்பாவித சம்பவங்களும் நடக்கவில்லை. மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாதவாறு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து  வருகிறது என்று கூறினார்.

click me!