நான் வேற கட்சியில் இணைய போகிறேன், அதிமுக கிடையவே கிடையாது - சுப்புலட்சுமி ஜெகதீசன் சொன்ன சீக்ரெட்!

By Narendran SFirst Published Sep 25, 2022, 8:03 PM IST
Highlights

சுப்புலட்சுமி ஜெகதீசன் இன்று மாலை அதிமுகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியானது.

சுப்புலட்சுமி ஜெகதீசன் இன்று மாலை அதிமுகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியானது. திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து விலகுவதாக சுப்புலட்சுமி ஜெகதீசன் அறிவித்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருந்த அறிக்கையில், தான் அரசியலில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என விரும்புவதாகவும், ஆகஸ்ட் 29 ஆம் தேதியே விலகல் கடிதத்தை முதலமைச்சரிடம் அளித்துவிட்டதாகவும் தெரிவித்திருந்தார்.

இதையும் படிங்க: மருத்துவக் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை.. அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர்.. என்ன நடந்தது..?

இந்நிலையில், அதிமுக வழக்கறிஞர் பாபு முருகவேல் இன்று மாலை தரமான சம்பவம் என்றும், தெறி மாஸ் எடப்பாடியார் என்றும் அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இந்த ட்வீட்டை தொடர்ந்து, சுப்புலட்சுமி ஜெகதீசன் இன்று மாலை அதிமுகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியானது.

இதையும் படிங்க: மதுரையில் விடுதி பெண்களின் குளிக்கும், உடைமாற்றும் காட்சிகளை டாக்டருக்கு அனுப்பிய மாணவி கைது!!

இந்த நிலையில் அதற்கு விளக்கம் அளித்துள்ளார் சுப்புலட்சுமி ஜெகதீசன். செய்தியாளர்களிடம் அவர் பேசிய போது, 'திமுகவில் இருந்து விலகிய பிறகு நான் இணைவதற்கான தகுதியான அரசியல் கட்சி தமிழகத்தில் இல்லை. தற்போது நான் அதிமுகவில் இணைய போவதாக செய்திகள் வெளியாகியது. அதிமுகவில் நிச்சயமாக இணையமாட்டேன். ஒருவேளை திராவிடர் கழகத்தில் நான் இணையலாம்' என்று விளக்கமளித்துள்ளார்.

click me!