எங்களுடைய அமைதியும் ஒரு எல்லைக்கு தான்..! ஒருவரையும் விட மாட்டேன்...? இறங்கி அடிக்கும் அண்ணாமலை

By Ajmal KhanFirst Published Sep 25, 2022, 4:14 PM IST
Highlights

தொண்டர்களுடைய அமைதி, எங்களுடைய பேச்சு எல்லாமே ஒரு எல்லைக்கு தான். தொடர்ந்து இரண்டு மூன்று நாட்களுக்கு இதே போன்ற சம்பவம் நடைபெற்றால் தொண்டரின் கோபத்திற்கு மிக அரசு ஆளாக வேண்டிய நிலை ஏற்படும் என எச்சரிப்பதாக அண்ணாமலை கூறியுள்ளார்.

முதல்வர் மீது திருப்தி இல்லை

கோவையில் பாஜக மாவட்ட தலைவர் கைது கண்டித்து நடைபெறவுள்ள போராட்டத்தில் பங்கேற்க கோவை வந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசியவர்,  பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் கோவை, திருப்பூரில் யாரெல்லாம் பாதிக்கப்பட்டுள்ளார்களோ அவர்களது இல்லங்களுக்கு செல்கிறோம். 4 குழு அமைத்துள்ளோம். கோவைக்கு வானதி சீனிவாசன் உள்ளார். பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அனைத்து சேதம் மதிப்பீடு செய்து அந்த தகவல்களை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்புகிறோம். பாஜக அலுவலகங்கள் மற்றும் நிர்வாகிகளின் வீடுகள் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட் சம்பவத்தில் முதல்வரின் நடவடிக்கைகள் திருப்தி இல்லை. இது தொடர்பாக உள்துளை அமைச்சர் அமித்ஷாவிடமும் கூறியதாக தெரிவித்தார். அவரும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததாக கூறினார்.

எங்கள் அமைதி ஒரு எல்லைக்கு தான்

வன்முறை சம்பவத்தில் ஈடுபடுபவர்கள் மீது  தேசிய பாதுகாப்புச் சட்டம் பாயும் என டிஜிபி தெரிவித்ததற்கு வரவேற்பு தெரிவித்து கொள்வதாக கூறினார். தமிழகத்தில் கடந்த 15 மாதமாக காவல் துறை கைகள் கட்டப்பட்டுள்ளதை தொடர்ந்து கூறி வருகிறோம் அதன் உச்சம் தான் தற்போது நடைபெற்று வருகிறது. எனவே தமிழக டிஜிபி முன் ஜாக்கிரதை நடவடிக்கையாக வன்முறையில் ஈடுபடுபவர்களை சிறையில் அடைக்க வேண்டும் .பாஜக என்றாலே ஒழுக்கமுள்ள கட்சி என்று பெயர் வாங்கிய கட்சி. தொண்டர்கள் கையில் எதுவும் எடுக்காமல் அமைதி காக்க வேண்டும். எனவே தமிழக அரசு நாம் கொடுக்கும் அழுத்தத்தில் நிச்சயமாக நடவடிக்கை எடுக்கும், இது போன்ற மிரட்டுவதால் பாஜக வளர்ச்சியே தமிழகத்தில் சீர்குலைக்க முடியாது. தொண்டர்களுடைய அமைதி, எங்களுடைய பேச்சு எல்லாமே ஒரு எல்லைக்கு தான். தொடர்ந்து இரண்டு மூன்று நாட்களுக்கு இதே போன்ற சம்பவம் நடைபெற்றால் தொண்டரின் கோபத்திற்கு மிக அரசு ஆளாக வேண்டிய நிலை ஏற்படும். 

தமிழ்நாட்டின் அமைதியை கெடுக்க முயற்சி.? சமூக நல்லிணக்கப் பேரணிக்கு அழைப்பு விடுத்த திருமாவளவன்

ஒருவரையும் விட மாட்டேன்

அண்ணாமலை என்ன சாப்பிட்டார். இட்லி சாப்பிட்டாரா அதற்கு என்ன சட்னி என உளவுதுறை தேடியதற்கு பதிலாக பிஎப்ஐ விசாரித்திருக்கலாம் என தெரிவித்தார். தமிழகத்தில் பல்வேறு காவல்நிலையத்தில் ஆ.ராசா மீது ஆயிரக்கணக்காக புகார் கொடுக்கப்பட்டுள்ளது. எந்த புகார் மீதும் வழக்கு பதியவில்லை. பெட்டிஷன் மட்டுமாகவே வாங்கப்பட்டுள்ளது. திருச்சியில் சிஎஸ்ஆர் கொடுத்த காவல்துறை அதிகாரி மாற்றப்பட்டு்ளார். கோவையில் உள்ளிட்ட இடங்களில் பாஜகவினர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார் அளிக்க இருப்பதாக தெரிவித்தார். ஒவ்வொரு காவல்துறைக்கும் 20 முதல் 30 வருடங்கள் பதவி உள்ளது. யாரையும் விட மாட்டேன். மாநில தலைவர் என்ற முறையில் நானே புகார் கொடுப்பேன் என கூறினார்.

இதையும் படியுங்கள்

மக்கள் விரோத மாடலை தான் திராவிட மாடல் என திமுக கூறி வருகிறதோ..? ஸ்டாலினை அலறவிடும் ஓபிஎஸ்

click me!