‘ஊழலை நிரூபிச்சு காட்டுங்க பிடிஆர்.. அரசியலில் இருந்து விலக தயார்’ - மாஸ் காட்டிய செல்லூர் ராஜு !

By Raghupati R  |  First Published Sep 25, 2022, 4:14 PM IST

கடந்த ஆட்சியில் கூட்டுறவுத் துறையில் 15 ஆயிரம் கோடி ஊழல் நடந்ததாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.


வரும் 29ஆம் தேதி  முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மதுரையில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்திற்கான முன்னேற்பாட்டு பணிகள் குறித்து  ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற  முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

Tap to resize

Latest Videos

அப்போது பேசிய அவர், ‘கடந்த ஆட்சியில் கூட்டுறவுத் துறையில் 15 ஆயிரம் கோடி ஊழல் நடந்ததாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறிய குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் நான் அரசியலில் இருந்து நிச்சியமாக விலக தயார். கூட்டுறவு துறையில் முறைக்கேடு நிரூபிக்கவில்லை  என்றால் நிதி அமைச்சர் அரசியலில் இருந்து விலகி கொள்ள தயாரா என கேள்வி எழுப்பினார்.

மேலும் செய்திகளுக்கு..“தமிழக அரசுக்கு 2 நாள் கெடு.. எல்லாம் சரியா நடக்கணும் அப்படியில்ல.! திமுகவை எச்சரிக்கும் அண்ணாமலை”

கூட்டுறவு துறையில் கூட்டுறவு துறை அதிகாரிகள் பரிந்துரையில் நகைக்கடன் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் எப்படி தகுதி இல்லாதவர்களுக்கு தள்ளுபடி செய்ய முடியும். அதிமுக ஆட்சியில் கலங்கம் இல்லாமல் துறை செயல்பட்டுள்ளது. கூட்டுறவு துறையில் சிறப்பாக செயல்பட்டமைக்கு அதிமுக ஆட்சியில் மத்திய அரசு சார்பில் வழங்கப்பட்ட 27 விருதுகளை தமிழக அரசு சார்பில் பெற்றுள்ளோம்.

அதிமுக ஆட்சியில் கூட்டுறவு துறையில் ஊழல் நடந்துள்ளதை நிரூபிக்க தயராக இருக்க வேண்டும். நிதி அமைச்சருக்கான தகுதி இல்லாத நபரை நிதி அமைச்சராக திமுக நியமித்துள்ளது. தமிழகத்தில் வரி உயர்வுக்கு காரணமே நிதி அமைச்சர் மட்டுமே. இல்லாததை சொல்லி அரசு மீது வெறுப்புணர்வு ஏற்பட நிதி அமைச்சர் காரணம். 48 லட்சம் பேருக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்வதாக கூறிவிட்டு 13 லட்சம் பேருக்கு மட்டுமே நகைக்கடன் தள்ளுபடி செய்யபட்டுள்ளது’ என்று பேசினார்.

மேலும் செய்திகளுக்கு..ரஷ்யா, அமெரிக்காவுக்கு ஆப்பு.. சீனா அரசியல் சாசனத்தை மாற்றியவர் - யார் இந்த சீனா அதிபர் ஜி ஜின்பிங் ?

click me!