திமுக ஆட்சியில் இதுதான் முதல் கையெழுத்து... உச்சகட்ட நம்பிக்கையில் உதயநிதி ஸ்டாலின்..!

By Asianet Tamil  |  First Published Mar 1, 2021, 10:09 PM IST

அதிமுக சுயமரியாதையை அடகு வைத்துவிட்டது. எனவே அதை அடிமை திமுக அல்லது அமித்ஷா திமுக என்றுதான் அழைக்க வேண்டும் என்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 


சென்னையில் தமிழ்மண் பதிப்பகம் சார்பில்  அண்ணா அறிவுக்கொடை 64 தொகுதி என்ற புத்தக அறிமுக விழா நடைபெற்றது. இந்த விழாவில் திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று நூலை அறிமுகம் செய்தார். பின்னர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், “புத்தகத்தை அறிமுக செய்ய வந்துள்ள நானே உங்களுக்கெல்லாம் ஓர் அறிமுகம்தான். தமிழகத்தில் முதன் முறையாக தேர்தல் பிரசாரத்தை தொடங்கியது நான்தான். திருக்குவளையில் கருணாநிதி வீட்டு முன்பு பிரசாரத்தைத் தொடங்கிய என்னை கைது செய்தார்கள். ஊழல் செய்துவிட்டு நான் கைதாகவில்லை, உதய சூரியன் சின்னத்துக்கு வாக்கு கேட்டதற்காக கைதானேன். 
மே 2 இதே ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் திமுகவின் வெற்றி விழா நிச்சயம் நடைபெறும். நான் மிகப்பெரிய வாசிப்பாளர் எல்லாம் கிடையாது. மிகவும் குறைவாகத்தான் படிப்பேன். கொரோனோ காலத்தில்தான் வாசிப்பு பழக்கத்தை அதிகப்படுத்திக்கொண்டேன். அதிமுக சுயமரியாதையை அடகு வைத்துவிட்டது. எனவே அதை அடிமை திமுக அல்லது அமித்ஷா திமுக என்றுதான் அழைக்க வேண்டும். கருணாநிதி இருந்தவரை மத்தியிலிருந்ரு யார் வந்தாலும் கோபாலபுரம் வந்து அவரை சந்திப்பார்கள். ஆனால் இன்று டெல்லியிலிருந்து கிளம்பியதும் இந்த இரு அடிமைகளும் விமான நிலையத்துக்குச் சென்று காத்துக்கொண்டிருக்கிறார்கள்.
புதிய கல்விக் கொள்கை திட்டத்தை அறிமுகப்படுத்திவிட்டு, தமிழ் கற்றுக்கொள்ள முடியாதது வருத்தம் அளிக்கிறது என்று மோடி கூறுகிறார். இதெல்லாம் நாடகம்.  கடந்த முறை தமிழகம் வந்து எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட எடுத்துவைத்த செங்கல் இன்றும் அப்படியேதான் இருக்கிறது. திமுக ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வை ரத்து செய்யும் முதல் கையெழுத்து போடப்படும். அத்துடன் கல்விக்கடன் ரத்து செய்யப்படும்” என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
 

click me!