என்னை பிரசாரத்துக்கு கூப்பிடுங்க... பாஜகவுக்காக வழிமேல் விழி வைத்து காத்திருக்கும் எஸ்.வி. சேகர்..!

Published : Mar 01, 2021, 09:56 PM IST
என்னை பிரசாரத்துக்கு கூப்பிடுங்க... பாஜகவுக்காக வழிமேல் விழி வைத்து காத்திருக்கும் எஸ்.வி. சேகர்..!

சுருக்கம்

சட்டப்பேரவைத் தேர்தலில் பிரசாரத்துக்கு பாஜக என்னை பயன்படுத்திக்கொண்டால், அது அவர்களுக்கு நல்லது. என்னைப் பிரசாரத்துக்கு அழைப்பார்கள் என்ற நம்பிக்கையோடு உள்ளேன் என்று நடிகர் எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்.  

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தில் நடிகர் எஸ்.வி.சேகர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக - அதிமுக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும். இதனால் மூன்றாவது முறையாக அதிமுக ஆட்சி அமைக்கும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. 9, 10, 11-ஆம் வகுப்பு மாணவ- மாணவிகள் தேர்ச்சி, விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி, 6 பவுன் வரை நகைக்கடன் தள்ளுபடி என பல நல்ல திட்டங்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதுவும் அதிமுக கூட்டணிக்கு சாதகம்தான்.
இந்தச் சட்டப்பேரவைத் தேர்தலில் பிரசாரத்துக்கு பாஜக என்னை பயன்படுத்திக்கொண்டால், அது அவர்களுக்கு நல்லது. என்னைப் பிரசாரத்துக்கு அழைப்பார்கள் என்ற நம்பிக்கையோடு உள்ளேன். திமுகவினர் பொய்ப் பிரசாரங்களை செய்துவருகிறார்கள். ஆனால், இத்தேர்தலில் அது எடுபடாது. மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் தனியாக நின்று தேர்தலை சந்தித்தால், ஓரளவுக்கு வாக்குகள் கிடைக்கும். சசிகலா வருகையால் தேர்தலில் எந்த மாற்றமும் ஏற்படபோவதில்லை. நடிகர் ரஜினி இனி அரசியலுக்கு வருவது கனவில்கூட நடக்காது. அவருக்கு இனி எந்த வாய்ப்பும் கிடையாது. ரஜினி மக்களின் நம்பிக்கையையும் இழந்துவிட்டார்” என்று எஸ்.வி.சேகர் தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

Thaimaman Thanga Mothiram Scheme: தாய்மாமன் தங்க மோதிரம் யாருக்கெல்லாம் கிடைக்கும்? தொடங்கியது கணக்கெடுப்பு..! பேரு குடுத்தாச்சா?
Rahul Gandhi: சாதி ரீதியான சர்ச்சை பேச்சு? ராகுல் காந்தி மீது பாய்ந்தது வழக்கு!