இதுதான் பெரியார் கண்ட கனவு... பிரச்சாரத்தில் அடித்து தூக்கும் ஓ.பன்னீர்செல்வம்...!

By vinoth kumarFirst Published Mar 22, 2021, 2:21 PM IST
Highlights

முன்பெல்லாம் அண்ணன்மார்கள் வாகனத்தை ஓட்ட, தங்கச்சிகள் பின்னால் உட்கார்ந்து செல்வார்கள். ஆனால் அம்மாவின் அரசின் மானிய விலை ஸ்கூட்டர் திட்டத்தால், தங்கச்சிமார்கள் வண்டி ஓட்ட, அண்ணன்மார்கள் பின்னால் உட்கார்ந்து செல்கிறார்கள். இது தான் பெரியார் கண்ட கனவு. 

மகளிர் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தி வருவதாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில்,  போடி நாயக்கனூர் தொகுதியில் போட்டியிடும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை எதிர்த்து திமுக சார்பில் தங்கதமிழ்செல்வன் போட்டியிடுகிறார். இதனால், இந்த தொகுதி நட்சத்திர அந்தஸ்து பெற்றுள்ளது.

இந்நிலையில், போடி நாயக்கனூர் தொகுதியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, அவர் பேசுகையில்;- தமிழகத்தை காங்கிரஸ், திமுக ஆட்சி செய்துள்ளது. ஆனால் மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தியது அதிமுக அரசு தான்.16 ஆண்டு காலம் தமிழகத்தில் முதல்வராக இருந்த ஜெயலலிதா, ஏழை, எளிய மக்களின் முன்னேற்றத்திற்கு அரும்பாடுபட்டவர். அவரது அரசு தமிழகத்தில் இதுவரை 6.5 லட்சம் வீடுகள் கட்டிக்கொடுத்துள்ளது. தேனி மாவட்டத்தில் மட்டும் இதுவரை 2,000 வீடுகள் கட்டித்தரப்பட்டுள்ளன. இன்னும் 2,400 வீடுகள் கட்டித்தர பட உள்ளதாக தெரிவித்தார்.

பெண்கள் நாட்டின் கண்கள் என்று எண்ணியவர் ஜெயலலிதா, அதனால் தான் ஆறாயிரமாக இருந்த பேறுகால நிதியுதவி தற்போது 18,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படுகிறது.  தாலிக்கு தங்கம் திட்டத்தில் 4 கிராமில் இருந்து 8 கிராம் ஆக உயர்த்தி வழங்கப்படுகிறது. முன்பெல்லாம் அண்ணன்மார்கள் வாகனத்தை ஓட்ட, தங்கச்சிகள் பின்னால் உட்கார்ந்து செல்வார்கள். ஆனால் அம்மாவின் அரசின் மானிய விலை ஸ்கூட்டர் திட்டத்தால், தங்கச்சிமார்கள் வண்டி ஓட்ட, அண்ணன்மார்கள் பின்னால் உட்கார்ந்து செல்கிறார்கள். இது தான் பெரியார் கண்ட கனவு. 

அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் நிறைவேற்றப்படும் திட்டங்களை அறிவித்துள்ளோம். ஆனால் திமுகவின் தேர்தல் அறிக்கையில் நிறைவேற்ற முடியாத பொய்யான வாக்குறுதிகளை அறிவித்துள்ளனர். திமுகவின் தேர்தல் அறிக்கை ஒரு கள்ள நோட்டு. அதிமுகவின் தேர்தல் அறிக்கையோ நல்ல நோட்டு என்று கூறியுள்ளார்.

click me!