இது என் நண்பன் படித்த கல்லூரி.. போகும் இடமெல்லாம் உதய் புராணம் பாடும் அன்பில் மகேஷ்.. கடுப்பில் ஸ்டாலின்.?

By Ezhilarasan BabuFirst Published Aug 26, 2022, 5:33 PM IST
Highlights

இது என் நண்பன் உதயநிதி படித்த கல்லூரி அதனால்தான் நான் இந்த கல்லூரி நிகழ்ச்சிக்கு வந்துள்ளேன் என அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார். லயோலா கல்லூரி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

இது என் நண்பன் உதயநிதி படித்த கல்லூரி அதனால்தான் நான் இந்த கல்லூரி நிகழ்ச்சிக்கு வந்துள்ளேன் என அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார். லயோலா கல்லூரி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். போகுமிடமெல்லாம் உதயநிதி என் நண்பன், எங்களது நட்பு ஆழமானது அப்படி  இப்படி என தொடர்ந்து  அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசி வருவது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது .

எதிர்க்கட்சிகளான அதிமுக பாஜகவினர்கூட  அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்னும் உதயநிதியின் ரசிகர் மன்ற தலைவராகவே உள்ளார் அமைச்சர் வேலையை முறையாக கவனிக்க சொல்லுங்கள் எனக் கூறுமளவிற்கு நட்பு சிலாகிப்பு அதிகமாக உள்ளது. உதயநிதியை போலவே அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் பாரம்பரிய திமுக குடும்பம், வெளிப்படையாக சொன்னால் வாரிசு அரசியலில் மூன்றாவது தலைமுறை, அவரின் தாத்தா அன்பில் தர்மலிங்கம், தந்தை அன்பில் பொய்யாமொழி, அவரின் என் மகன்தான் அன்பில் மகேஷ், இவரது தந்தை ஸ்டாலினுடன்நெருக்கம் காட்டியவர் ஆவார், அதேபோல அன்பில் மகேஷ் உதயநிதியுடன் நண்பராக இருந்து வருகிறார்.

திமுக இளைஞராணி செயலாளராக உதயநிதி தேர்வு செய்யப்படுவதற்கு முன்பே இளைஞர் அணியில் பொறுப்பு வகித்தவர் அன்பில் மகேஷ், உதயநிதி ரசிகர் மன்றத்தின் தலைவராகவும் இருந்தவர் ஆவார், உதயநிதி பொறுப்புக்கு வருவதில் அதிக ஆவர்வம் காட்டியவர், அதிலும் திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து உதயநிதியின் குரலாகவே மாறிவிட்டார் அன்பில் மகேஷ், செல்லும் இடமெல்லாம் நானும் உதயநிதியும் இணைபிரியா நண்பர்கள், எனக்கும் ஸ்டாலின் குடும்பத்திற்கும் தாய் மகன் உறவு,  முதலமைச்சர் ஸ்டாலினின் எனக்கு தந்தையைப் போன்றவர் என அவர் அடிக்கடி பேசி வருவது சீனியர்கள் மத்தியிலேயே எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படியுங்கள்: “அதிமுக முக்கிய பிரமுகர் கடத்தல்.. கொங்கு மண்டலத்தில் பரபரப்பு.! அதிர்ச்சியில் அதிமுக நிர்வாகிகள்”

அதனைத் தொடர்ந்து ஸ்டாலின் குடும்பத்திற்கு நெருக்கமானவர் என்பதை  காட்டிக் கொள்வதன் மூலம் மற்ற அமைச்சர்களை விட தன்னை வேறுபடுத்திக் காட்டிக் கொள்ள முயற்சிக்கிறார் என்ற விமர்சனமும் இவர் மீது உள்ளது, எதிர்க்கட்சியான பாஜக கூட அடிக்கடி அன்பில் மகேஷ் பொய்யாமொழியை இதை வைத்து விமர்சித்து வருகிறது, பள்ளிக்கல்வி அமைச்சர் பதவி கொடுத்தால் அந்த வேலையை பார்க்காமல் அவர் இன்னும் உதயநிதியின் ரசிகர் மன்ற தலைவராக இருந்து வருகிறார் அமைச்சர் பதவிக்கு தகுதியற்றவர் என்று விமர்சித்து வருகின்றனர். 

அதற்கேற்ப சமீப காலமாக நடந்து வரும் அத்தனை பிரச்சினைகளும் பள்ளிக்கல்வித்துறையிலேயே அரங்கேறி வருகிறது, கள்ளக்குறிச்சி மாணவி விவகாரத்தில் பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டார் என்ற விமர்சனம் அன்பில் மகேஷ் மீது இருந்து வருகிறது,  தஞ்சை மாணவி மரண வழக்கு, கடந்த கல்வியாண்டில் 10, 12ஆம் வகுப்பு திருப்புதல் தேர்வு வினாத்தாள் கசிவு போன்ற விவகாரங்கள் அரசுக்கு பெரும் அவப்பெயரை ஏற்படுத்தியது, இது அனைத்துமே பள்ளிக்கல்வித்துறை சம்பந்தப்பட்டவை, மொத்தத்தில் அன்பில் மகேஷ் சரியாக செயல்படவில்லை என்ற விமர்சனம் இருந்து வருகிறது.

இதையும் படியுங்கள்: அதிமுக திட்டத்திற்கு மூடுவிழா.. அதிரடியாக களமிறக்கிய CV.சண்முகம்.. திண்டிவனத்தில் நடக்க போகும் தரமான சம்பவம்.

கல்வி தொலைக்காட்சி தலைமைச் செயல் அதிகாரியாக ஆர்எஸ்எஸ் சித்தாந்தம் கொண்ட நபரை நியமித்தது அன்பில் மகேஷ் பொய்யாமொழி மீது கடும் விமர்சன்த்தை ஏற்படுத்தியது, இந்த சர்ச்சை அரசுக்கும் தலைவலியாக மாறியுள்ளது, இதேபோல் முதலமைச்சரின் கொங்கு மண்டல சுற்றுப்பயணத்தின்போது கூட்டத்திற்கு பொது மக்களைத் திரட்ட பள்ளிக் கல்வித் துறை வாகனங்கள் பயன்படுத்தப்பட்டதாக புகார்கள் எழுந்து மகேசுக்கு நெருக்கடியை அதிகரிக்கச் செய்துள்ளது, எப்போதும் அன்பில் மகேஷ் விவகாரத்தில் மென்மையாக இருக்க கூடிய முதல்வர் ஸ்டாலின் இந்த விவகாரத்தில் அன்பில் மகேஷ் மீது கொதிப்பில்  உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் விவகாரத்தில் அவர் அரசு அதிகாரிகளிடம் அறிக்கை கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது, அவர் சென்னை திரும்பியவுடன் மகேஷ் பொய்யாமொழி இது நடவடிக்கை இருக்குமென்றும் தலைமைச் செயலக வட்டாரங்கள் கூறுகின்றன. 

இதெல்லாம் ஒரு புறமிருந்தாலும் சென்னை லயோலா கல்லூரியில் தான் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் பேசுகையில், இது என் நண்பன் உதயநிதி படித்த கல்லூரி, அதனால் இந்த கல்லூரி எனக்கு மிகவும் பிடிக்கும், அதனால்தான் நான் இந்த கல்லூரி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்திருக்கிறேன், எனக்கு மிகவும் பரிச்சயமான கல்லூரி, படிப்பைக் காட்டிலும் சமுதாயத்தின் மீது லயோலா கல்லூரி அதிக அக்கறை எடுத்துக்கொள்ளும், நாட்டு மக்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் முதலில் குரல் கொடுக்கும் கல்லூரி இது என அவர் பேசியுள்ளார் அங்கும் உதயநிதி புராணம் பாடியுள்ளார். இதை வைத்து  பலரும் அவரை விமர்சித்து வருகின்றனர்.  
 

click me!