
இரட்டை இலை சின்னமும் கட்சியும் எடப்பாடி- ஒபிஎஸ் அணிக்கே என்று தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து 83 பக்கங்கள் கொண்ட தீர்ப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
இதில், அதிமுகவின் பொதுக்குழு உறுப்பினர்களின் எண்ணிக்கை 2128 என்றும் 2128 பேரில் 1877 பொதுக்குழு உறுப்பினர்கள் எடப்பாடி - பன்னீர் அணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செப். 12 ஆம் தேதி நடைபெற்ற சென்னை பொதுக்குழு தீர்மானத்திற்கு 1877 பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
தினகரன் தரப்புக்கு 6 எம்.பிக்கள், தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 பேர் உட்பட 20 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆனால் எடப்பாடி அணிக்கு 111 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
பொதுக்குழு உட்பட அனைத்து அமைப்புகளிலும் எடப்பாடி - பன்னீர் அணிக்கே பெருன்பான்மை உள்ளது.
மக்களவையில் எடப்பாடி அணிக்கு 34 பேரும் டிடிவி அணிக்கு 3 பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். மாநிலங்களைவையில் எடப்பாடி அணிக்கு 8 பேரும் டிடிவி அணிக்கு 3 பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
மதுசூதனன் தலைமையிலான அணியே இரட்டை இலையை பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.