இதுதான் தமிழ்நாடு... இப்போதாவது உணருங்கள் எடப்பாடி... கனிமொழி எச்சரிக்கை..!

Published : Dec 30, 2019, 03:20 PM IST
இதுதான் தமிழ்நாடு... இப்போதாவது உணருங்கள் எடப்பாடி... கனிமொழி எச்சரிக்கை..!

சுருக்கம்

இதுதான் தமிழ்நாடு என்பதை இப்போதாவது எடப்பாடி அரசு உணரட்டும் என திமுக மகளிரணி செயலாளரும் திமுக எம்.பியுமான கனிமொழி அறிவுறுத்தி இருக்கிறார்.

சென்னையில் நேற்று குடியுரிமை திருத்தச் சட்ட மசோதாவை எதிர்த்து கோலம் போட்டனர். இந்நிலையில் அவர்கள் கைது செய்யப்பட்டனர். அதனை கண்டிக்கும் விதமாக கனிமொழி, மு.க.ஸ்டாலின் வீட்டில் கோலம்போட்டு பாஜக அரசுக்கு எதிர்ப்பை தெரிவித்தனர். இதனையடுத்து கோலம்போடுவ்து சமூகவலைதளங்களில் வைரலாக பரவியது. 

திமுக ஆதரவாளர்கள் தங்கள் வீட்டி சிஏஏவுக்கு எதிராக கோலம் போட்டு ட்விட்டர் பக்கத்தில் ட்ரெண்டாக்கினர். இந்நிலையில் கோலம் போட்டதாக கைடு செய்யப்பட்ட 5 பெண்கள் இன்று விடுவிக்கப்பட்டனர். அவர்கள், கனிமொழியையும், மு.க.ஸ்டாலினையும் சந்தித்தனர். அதன்பிறகு தனது டவிட்டர் பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்டுள்ள கனிமொழி,  '’இதுதான் தமிழ்நாடு என்பதை இப்போதாவது எடப்பாடி அரசு உணரட்டும் '’

நேற்று சென்னையில் கோலம் போட்டதற்காக கைது செய்யப்பட்டவர்கள்  கழகத் தலைவர் அண்ணன் ஸ்டாலின் அவர்களையும்,என்னையும் இன்று சந்தித்தனர். ஜனநாயகம் காக்கும் முனைப்போடு கோலமிட்ட ஐவரைக் கைது செய்து, அனைவரையும் கோலம் போட வைத்துவிட்டது அடிமை அதிமுக அரசு’’எனத் தெரிவித்துள்ளார்.  

 

 

PREV
click me!

Recommended Stories

ஸ்டாலின் ரெடியாக இருங்க.. அடுத்த டார்கெட் தமிழ்நாடு தான்.. பிரதமர் மோடி மண்ணில் அமித்ஷா சபதம்!
ரூ.1,020 கோடி ஊழல்? ED-க்கும், பாஜகவுக்கும் அஞ்ச மாட்டோம்.. கே.என்.நேரு விளக்கம்!