வள்ளுவரை விடாமல் துரத்தும் பாஜக...!! விழுந்து விழுந்து ரேடியோவில் வகுப்பெடுத்த பிரதமர் மோடி..!!

By Ezhilarasan BabuFirst Published Dec 30, 2019, 1:42 PM IST
Highlights

பொங்கலின் இறுதிநாளான கொண்டாடப்படும் திருவள்ளுவர் நாளை கொண்டாடுவதில் இந்தியர்கள் அனைவரும் பெருமிதம் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார். 

பொங்கல் நாளின் இறுதி நாளை திருவள்ளுவர் தினமாக கொண்டாடுவதில் இந்தியர்கள் அனைவரும் பெருமை கொள்ள வேண்டுமென  பிரதமர் மோடி கருத்து  தெரிவித்துள்ளார்,  தொடர்ந்து தமிழின் பெருமைகளை தான் செல்லும் இடங்களில் எல்லாம் பேசி சிலாகித்து வருகிறார் இந்திய பிரதமர் மோடி,  தான் செல்லும் சர்வதேச நாடுகளில்  திருக்குறள் ,  அவ்வையார் , தமிழினத்தின் பெருமைமிகு ஆளுமைகளையும்   தமிழ் இலக்கியங்களில் வரும் சொற்றொடர்களையும் மேற்கோள்காட்டி அதற்கான அர்த்தத்தை விளக்கி தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார் பிரதமர். 

அந்த வகையில்,   உலகிலேயே மூத்த  மொழி தமிழ்தான்  என பிரதமர் தன் உரையில் குறிப்பிட்டு  தமிழுக்கு பெருமை சேர்த்துள்ளார் .  ஆனால், பிரதமரும் பாஜகவும் திடீரென தமிழ்மீது அக்கரைகாட்டுவது  வாக்கு அரசியலுக்காகத்தான்,  எப்படியாவது தமிழ்நாட்டில் காலுன்ற வேண்டும் என்பதற்காகவே வள்ளுவரை தங்கள் அரசியலுக்கு பயன்படுத்துகின்றனர்என திமுக உள்ளிட்ட  எதிர்க்கட்சிகள்  கடுமையாக குற்றஞ்சாட்டி வருகின்றனர்.  இந்நிலையில்  மனதின் குரல் என்ற  மன் கி பாத் நிகழ்ச்சியில் ரேடியோ உரையாடல் மூலம்  நாட்டு மக்களுக்கு  உரைநிகழ்த்தி வரும்  பிரதமர் மோடி,  அதில்  வள்ளுவரைப் குறிப்பிட்டு பேசியுள்ளார்.  அதில் தெரவித்துள்ள ஆவர்,

 

சிறந்த ஞானியும் ,  அறிஞருமான  திருவள்ளுவரை அனைவரும் போற்றி வணங்க வேண்டும் ,  பொங்கலின் இறுதிநாளான கொண்டாடப்படும் திருவள்ளுவர் நாளை கொண்டாடுவதில் இந்தியர்கள் அனைவரும் பெருமிதம் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.  தொடர்ந்து பேசிய அவர்,   உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்குவதற்கு நாம் முன்னுரிமை அளிக்க வேண்டும் ,  இந்தியாவில் உள்ள இளைஞர்களின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது வரும் 2020 இளைஞர்களுக்கான ஆண்டு, நம் இளைஞர்கள்  தேசபக்தியை தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறைக்கு செல்லுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்...

click me!