இது அரசியல் காழ்ப்புணர்ச்சி.. திமுக அரசே இத்தோடு நிறுத்திக்கோங்க.. ஓ.பன்னீர்செல்வம் ஆவேசம்..!

Published : Jul 22, 2021, 03:10 PM IST
இது அரசியல் காழ்ப்புணர்ச்சி.. திமுக அரசே இத்தோடு நிறுத்திக்கோங்க..  ஓ.பன்னீர்செல்வம் ஆவேசம்..!

சுருக்கம்

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது பொய் வழக்கு போடும் நோக்கத்தில் சோதனை நடைபெறுகிறது. அரசியல் ரீதியாக சந்திக்க முடியாமல் திமுக இருக்கிறது. 

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது பொய் வழக்கு போடும் நோக்கத்தில் சோதனை நடைபெறுகிறது அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். 

சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உட்கட்சி தேர்தல் நடத்துவது, சசிகலா விவகாரம் உள்ளிட்ட பல முக்கிய ஆலோசனை நடைபெற்றதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்;- அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது பொய் வழக்கு போடும் நோக்கத்தில் சோதனை நடைபெறுகிறது. அரசியல் ரீதியாக சந்திக்க முடியாமல் திமுக இருக்கிறது. 


 
எங்களை அச்சுறுத்த எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடைபெறுகிறது.  எவ்வளவு பெரிய அச்சுறுத்தல் வந்தாலும் எதிர்கொள்ள அதிமுக தயார். திமுக அரசு இது போன்ற நடவடிக்கைகளை நிறுத்திக்கொள்ள வேண்டும்.  சட்டபூர்வமாக இதை எதிர்கொள்ள அதிமுக தயாராக உள்ளது என தெரிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

வங்கதேசத்தின் பாதுகாப்புக்கும், செழிப்புக்கும் இந்தியாவுக்கு நன்றியோடு இருங்கள்..! யூனுஷுக்கு ஷேக் ஹசீனா எச்சரிக்கை.!
GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!