மொத்தமாக காலியாகும் அமமுக கூடாராம்.. முக்கிய பிரமுகரை கொக்கி போட்டு தூக்கிய எடப்பாடியார்.. விழிபிதுங்கும் TTV

Published : Jul 22, 2021, 01:54 PM ISTUpdated : Jul 27, 2021, 06:55 PM IST
மொத்தமாக காலியாகும் அமமுக கூடாராம்.. முக்கிய பிரமுகரை கொக்கி போட்டு தூக்கிய எடப்பாடியார்.. விழிபிதுங்கும் TTV

சுருக்கம்

அமமுக செய்தி தொடர்பாளரும், மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளருமான M.R.ஜெமிலா எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.

அமமுக செய்தி தொடர்பாளரும், மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளருமான M.R.ஜெமிலா எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.

நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் டிடிவி.தினகரனின் அமமுக, தேமுதிக உள்ளிட்ட சிறிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டனர். இதில், அமமுக பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பெருபான்மையான இடங்களில் டெபாசிட் இழந்து படுதோல்வி அடைந்தது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அக்கட்சியில் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரனும் தோல்வி அடைந்தார். 

இதனால், இனி மேல் அமமுகவில் இருந்தால் அரசியல் எதிர்காலம் கிடையாது என்பதால் முன்னாள் எம்எல்ஏக்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் திமுக மற்றும் அதிமுகவில் இணைந்து வருகின்றனர். சமீபத்தில் தினகரனால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட மாரியப்பன் கென்னடி, ஜெயந்தி பத்மநாதன் ஆகியோர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். 

அதேபோல், டிடிவி தினகரனின் வலது கரம் போல இருந்த பாப்பிரெட்டிபட்டி பழனியப்பன், ராமநாதபுரத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர் வ.து. நடராஜன், இவரது மகனும் ராமநாதபுரம் மாவட்டச் செயலாளராக இருந்த வ.து.ந. ஆனந்த் ஆகிய இருவரும் திமுகவில் இணைந்தனர். மேலும், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அமமுக செயலாளர் பொன்ராஜா, மத்திய சென்னை மத்திய மவட்ட செயலாளர் சந்தான கிருஷ்ணன், வடசென்னை மத்திய மாவட்ட செயலாளர் லட்சுமி நாராயணன் உள்ளிட்டோர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் இணைந்தனர்.

இந்நிலையில், அமமுக செய்தி தொடர்பாளரும், மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளருமான M.R.ஜெமிலா எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். அடுத்தடுத்து, அமமுக முக்கிய நிர்வாகிகள் அதிமுக, திமுகவில் இணைந்து வருவது டிடிவி.தினகரனை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

திமுகவிற்கு இடியை இறக்கிய கிறிஸ்தவர்கள்..! 234 தொகுதிகளிலும் முழு ஆதரவு என பேச்சு
நம்ம சமூகத்தவர் முதல்வரா ஜெயிக்கணும்னா இதுதான் சான்ஸ்... டெல்லியில் எஸ்.பி.வேலுமணியின் சீக்ரெட் மூவ்..!