MNM மட்டும் பெற்ற வெற்றி அல்ல இது. எம் எண்ணம் வென்றது..!! கர்ஜிக்கும் மநீம தலைவர் கமல்ஹாசன்.!!

Published : May 08, 2020, 09:26 PM IST
MNM மட்டும் பெற்ற வெற்றி அல்ல இது. எம் எண்ணம் வென்றது..!! கர்ஜிக்கும் மநீம தலைவர் கமல்ஹாசன்.!!

சுருக்கம்

விலகி இருங்கள்;சமூக இடைவெளியை கடைபிடியுங்கள் என அரசாங்கம் தொண்டை கிழிய கத்திக்கொண்டிருக்கிறது. மறுபுறம் மதுக்கடையை திறந்து விட்டிருக்கிறது அரசு.இதில் எங்கே? எப்படி? சமூக இடைவெளியை கடைப்பிடிக்க போகிறார்கள் மதுப்பிரியர்கள். அவர்களை யாராலும் கட்டுப்படுத்த தான் முடியுமா? இதற்கெல்லாம் சுளீரென்று முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது நீதிமன்றம்.   

'டாஸ்மாக்' கடைகளை மூட உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது தமிழ்த் தாய்மார்களின் குரலுக்கான வெற்றி என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். "தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. நீதியரசர்கள்.. 'தமிழகத்தில் பொது முடக்கம் முடியும் வரை டாஸ்மாக் கடைகளை மூட சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளனர். டாஸ்மாக் கடைகளை திறப்பது குறித்து உயர்நீதிமன்றத்தின் உத்தரவுகள் பின்பற்றப்படவில்லை என தொடர்ந்த வழக்கில்  நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது'. 

 இந்த நிலையில், இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தனது டிவிட்டரில், மருத்துவர்கள், காவலர்கள், தூய்மைப் பணியாளர்கள் உயிரைப் பணயம் வைத்து போராடிக் கொண்டு இருக்கின்றனர். நடுத்தர மக்கள் வீட்டில் கட்டுண்டு இருக்கின்றனர். ஏழைகள் வாழ வழியின்றி தவிக்கின்றனர். தற்போது டாஸ்மாக் திறந்து விட்டு, ஊர்கூடி கட்டிக்காத்ததை காற்றில் விடுவது நியாயமா?நீதிமன்றத்தின் மீது நம்பிக்கையையும், சத்தியமே வெல்லும் என்றும் நிரூபித்திருக்கிறது இந்த தீர்ப்பு. மக்களுக்கான நீதி கிடைத்திருக்கிறது. MNM மட்டும் பெற்ற வெற்றி அல்ல இது. எம் எண்ணம் வென்றது என தமிழகமே கொண்டாட வேண்டிய வெற்றி. இது தமிழ்த் தாய்மார்களின் குரலுக்கான வெற்றி. வெல்லும்தமிழகம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

விருகம்பாக்கம் தொகுதி யாருக்கு..? பிரபாகர் ராஜாவா..? தனசேகரனா..? ட்விஸ்ட் வைக்கும் திமுக தலைமை..!
பாரதியாரே நமக்கு சல்லி... சப்ப பீஸு..! மகாகவியை ரொம்ப கேவலமாக பேசும் திமுக கூட்டம்..!