10 சீட்டு, 15 சீட்டுக்கு தொங்குவது காங்கிரஸ் கட்சிக்கு அழகல்ல.. திமுகவை தூக்கிபோட்டு வாங்க.. கருப்பையா ஆவேசம்

Published : Mar 04, 2021, 06:58 PM IST
10 சீட்டு, 15 சீட்டுக்கு தொங்குவது காங்கிரஸ் கட்சிக்கு அழகல்ல.. திமுகவை தூக்கிபோட்டு வாங்க.. கருப்பையா ஆவேசம்

சுருக்கம்

ஒரு காலத்தில் திமுகவுக்கு நிகராக இருந்த காங்கிரஸ் கட்சி தற்போது 10 இடத்திற்கு 15 இடத்திற்கும் தொங்கினால் கடைசியில் மக்கள் மனதில் மட்டும் தான் இடம் கிடைக்கும் என பழ.கருப்பையா கூறியுள்ளார். 

ஒரு காலத்தில் திமுகவுக்கு நிகராக இருந்த காங்கிரஸ் கட்சி தற்போது 10 இடத்திற்கு 15 இடத்திற்கும் தொங்கினால் கடைசியில் மக்கள் மனதில் மட்டும் தான் இடம் கிடைக்கும் என பழ.கருப்பையா கூறியுள்ளார். 

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த பழ.கருப்பையா;- காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் ஜெயித்து இனி கோலோச்சப் போவதில்லை. இப்போது தோற்றால் குடிமுழுகிப் போய்விடாது. யானை படுத்தால் குதிரை மட்டம் என்கிற பழமொழிக்கு ஏற்ப காங்கிரஸ் நல்ல கட்சி. மோடியை எதிர்ப்பவர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். பாஜகவின் பி டீம் என மக்கள் நீதி மய்யம் கட்சி கூறும் திமுக தான் பாஜகவின் பி டீம். 

ஊழலை ஒழிக்க வேண்டும் என்றும், மக்கள் பணம் பெற்றுக்கொண்டு வாக்களிக்கிறார்களே என்று குறை கூறும் கிளைக் கட்சிகள் தலைமை கட்சியிடம் பணம் பெற்றுக்கொண்டு ஊழலுக்கு துணை போகிறார்கள் என்று குற்றம்சாட்டினார். மே மாதம் தொடக்கத்தில் வாக்கு எண்ணிக்கை நடத்துவோம் என்றால் ஏப்ரல் மாத இறுதியில் தேர்தல் நடத்த வேண்டியது தானே? என காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார். 

மேலும் பேசிய அவர் மத்தியில் ஆள்பவர்கள் எல்லா இடங்களுக்கும் பணம் அனுப்பி விட்டார்கள்கள் என்றும் அடுத்தவர்கள் வேட்டி அவிழ்ந்து கட்டுவதற்குள் தேர்தல் நடத்தி விட வேண்டும் என அவகாசம் காட்டுகிறார்கள் என பழ.கருப்பையா கூறியுள்ளார். 

PREV
click me!

Recommended Stories

ஸ்டாலின் ரெடியாக இருங்க.. அடுத்த டார்கெட் தமிழ்நாடு தான்.. பிரதமர் மோடி மண்ணில் அமித்ஷா சபதம்!
ரூ.1,020 கோடி ஊழல்? ED-க்கும், பாஜகவுக்கும் அஞ்ச மாட்டோம்.. கே.என்.நேரு விளக்கம்!