விடுதலை சிறுத்தைகள் கேட்பது இந்த தொகுதிகளைதான்.. நிர்வாகிகளின் எதிர்ப்பை மீறி திமுகவுடன் கைகோர்த்த திருமா.

By Ezhilarasan BabuFirst Published Mar 4, 2021, 6:57 PM IST
Highlights

மேலும் ஆறு தொகுதிகளில் பொது தொகுதி உள்ளதா என்பது குறித்து பிறகு பேச்சுவார்த்தை நடத்துவோம்.  விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்து விரைவில் பேச்சுவார்த்தை நடைபெறும் என கூறியிருந்தார். 

திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் வட மாவட்டங்களை குறி வைத்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தங்களுக்கு தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என திமுகவிடம் கேட்டுக்கொண்டுள்ளது. இந்நிலையில் அந்த 6 தொகுதிகளில் விவரமும் வெளியாகி உள்ளது. 

திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி திமுக இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதனையடுத்து செய்தியாளருக்கு பேட்டி அளித்து திருமாவளவன், 6 தொகுதிகளிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தனிச் சின்னத்தில் போட்டியிடும் என்றார், மேலும் தமிழகத்தில் சூழ்ந்திருக்கும் சனாதன பேராபத்திலிருந்து தமிழ்நாட்டையும் தமிழ்நாட்டு மக்களையும் பாதுகாக்க வேண்டிய யுத்த களமாக இந்த தேர்தல் அமைந்திருக்கிறது. 

தமிழ்நாட்டையும் பாண்டிச்சேரியும் குறிவைத்து பாரதிய ஜனதா மற்றும் சங்பரிவார் அமைப்புகள் பல்வேறு சதி முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாட்டைப் பொருத்தவரை அவர்களால் காலூன்ற முடியாமல் வேர் ஊன்ற முடியாத நிலை கடந்த 10 ஆண்டுகளாக நிலவி வருகிறது. எந்த காலத்திலும் பாஜக வெற்றி பெற முடியாது என்ற நிலையில்,  வட கிழக்கு மாகாணங்களில் பல்வேறு சூழ்ச்சிகளை அரங்கேற்றி ஆட்சி மாற்றத்தை கொண்டு வந்தனர். ஆனால் தமிழ்நாட்டில் அவர்களால் எதையும் செய்ய இயலவில்லை. உத்தரபிரதேசம் மத்திய பிரதேசம் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் ஆட்சி மாற்றத்தை கொண்டு வர முடிந்தவர்களால் தமிழகத்தில் மாற்றத்தை கொண்டுவர முடியவில்லை. 

கருணாநிதி ஜெயலலிதா இல்லாத சூழ்நிலையில் சமூகநீதி மன்னனான தமிழகத்தில் சமூகநீதியை ஒழித்துவிட வேண்டும் சாதி வெறியும் மத வெறியை தூண்ட வேண்டும் என்று திட்டம் போட்டு செயல் பட்டு வருகிறது.2017 ஆம் ஆண்டு முதல் விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் இடதுசாரி கட்சிகள் திராவிட முன்னேற்றக் கழகத்துடன் பயணித்து வருகிறது.சனாதன சக்திகளை காலூன்ற விடக்கூடாது என்ற அடிப்படையில் திமுகவுடன் பயணித்து வருகிறது. இந்நிலையில் திமுகவுடன் தொகுதி உடன்பாடு பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் 6 தொகுதிகளில் தேர்தலில் போட்டியிடுவது என முடிவெடுத்துள்ளோம். 

விடுதலை சிறுத்தை நிர்வாகிகளும் 6 தொகுதிகளுக்கு ஒப்புக் கொள்ள வேண்டாம் என்று எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும் தமிழகத்தில் உள்ள சூழலைக் கருத்தில் கொண்டு, எதிர்கால அரசியலை கருத்தில் கொண்டும், திமுகவுடன் கூட்டணி தொடர்வது முதன்மையானது. மதச்சார்பற்ற சக்திகளின் வாக்குகள் எக்காரணத்திற்காகவும் சிதறி விடக்கூடாது, அப்படி வருவதற்கு வழி தந்துவிடக் கூடாது என்றும் சனாதன சக்திகளை துரத்தியடிக்க வேண்டும் என்ற கொள்கை உறுதியுடனும் விடுதலை சிறுத்தைகள் திமுகவுடன் தொகுதி உடன்பாட்டை ஏற்படுத்தி இருக்கிறோம். 

மேலும் ஆறு தொகுதிகளில் பொது தொகுதி உள்ளதா என்பது குறித்து பிறகு பேச்சுவார்த்தை நடத்துவோம்.  விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்து விரைவில் பேச்சுவார்த்தை நடைபெறும் என கூறியிருந்தார்.  இந்நிலையில், தனி சின்னத்தில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தங்களுக்கு செய்யூர், பொன்னேரி, காட்டுமன்னார் கோயில்,  திட்டக்குடி, வானூர் ஆகிய தனி தொகுதிகளையும், சோழிங்கநல்லூர், மயிலம், திருவள்ளூர், உளுந்தூர்பேட்டை, புவனகிரி ஆகிய பொது தொகுதிகள் ஆகியவற்றில் 6 தொகுதிகளை ஒதுக்க கேட்டுக்கொண்டுள்ளது. 
 

click me!