இதெல்லாம் ஒரு வெற்றியே இல்ல.. அடுத்த 5 ஆண்டும் ஆட்சியை பிடிக்கணும்.. திமுக எம்எல்ஏக்களை அலறவிட்ட ஸ்டாலின்.

By Ezhilarasan BabuFirst Published Jun 22, 2021, 10:07 AM IST
Highlights

அதேபோல் அமைச்சர்கள் தங்கள் துறை சார்ந்த விவரங்களில் மிகத் தெளிவுடன் இருக்க வேண்டும், எதிர்க்கட்சிகள் எழுப்பக்கூடிய கேள்விகளுக்கும் கோரிக்கைகளுக்கும் முறையான பதிலை உடனுக்குடன் அளித்திட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டது.

திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் முதலமைச்சர் மு. க ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது

2021 சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற பின்னர் இரண்டாவது முறையாக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறுகிறது. ஏற்கனவே கடந்த மே மாதம் 4ம் தேதி திமுகவின் சட்டமன்ற குழு தலைவரை தேர்ந்தெடுப்பதற்கு கூட்டம் நடைபெற்றது.பத்து ஆண்டுகளுக்குப் பின்னர் ஆட்சியில் அமர்ந்துள்ள நிலையில், முதல் முறை சட்டமன்ற உறுப்பினர்கள் கிட்டத்தட்ட 40க்கும் மேற்பட்டோர் உள்ள நிலையில், திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அவையில்  எப்படி நடந்துகொள்வது தொகுதி சார்ந்த பிரச்சனைகளை எழுப்புவது உள்ளிட்டவை குறித்து அறிவுரைகள் வழங்கப்பட்டது.

அதேபோல் அமைச்சர்கள் தங்கள் துறை சார்ந்த விவரங்களில் மிகத் தெளிவுடன் இருக்க வேண்டும், எதிர்க்கட்சிகள் எழுப்பக்கூடிய கேள்விகளுக்கும் கோரிக்கைகளுக்கும் முறையான பதிலை உடனுக்குடன் அளித்திட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டது. இறுதியில் முதலமைச்சர் மு .க ஸ்டாலின் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு; தற்போது நாம் பெற்று இருப்பது மாபெரும் வெற்றி அல்ல, அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றியை பெறும் வகையில், ஐந்தாண்டுகளில் நமது செயல்பாடுகள் இருக்க வேண்டும்.பேரவையில் எதிர்க்கட்சியினர் எழுப்பும் கேள்விகளுக்கு  மூத்த உறுப்பினர்கள் கவனமுடன் பதிலளிக்க வேண்டும். பேரவையில் சிறப்பாக செயல்படுவதற்கு உறுப்பினர்கள் துறை வாரியாகவும் தொகுதி வாரியாகவும் தரவுகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் பேரவையில் அதிக அளவில் கேள்விகளை எழுப்ப வேண்டும். அப்போதுதான் நீங்கள் சிறப்பாக செயல்பட முடியும். இவ்வாறு அவர் பேசினார். முதலமைச்சர் ஸ்டாலின் உட்பட 124 சட்டமன்ற உறுப்பினர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர். மேலும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி உள்ளிட்டோர் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டார். 

click me!