தமிழகத்தில் கொரோனா 2 வது அலை ஓய்ந்தது.? அனைத்து மாவட்டங்களிலும் தொற்று எண்ணிக்கை ஆயிரத்துக்கும் கீழாக சரிவு.

Published : Jun 22, 2021, 09:35 AM IST
தமிழகத்தில் கொரோனா 2 வது அலை ஓய்ந்தது.? அனைத்து மாவட்டங்களிலும் தொற்று எண்ணிக்கை ஆயிரத்துக்கும் கீழாக சரிவு.

சுருக்கம்

அதேபோல தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்திற்கும் கீழாக குறைந்திருக்கிறது. சென்னையில் மட்டும் நேற்று ஒரே நாளில் 439 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்துக்கும் கீழாக குறைந்துள்ளது. தமிழகத்தில் கொரொனா பாதிப்பின் 2 ஆம் அலை படிப்படியாக குறைந்து வருகிறது, கடந்த மே மாதத்தில் கொரொனா பாதிப்பு உச்சத்தில் இருந்த பொழுது தமிழகத்தில் மட்டும் நாள் ஒன்றுக்கு 35 ஆயிரம் பேர் வரை கொரொனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். 

 

குறிப்பாக, சென்னையில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தினம்தோறும் பாதிக்கப்பட்ட வந்தனர். அதற்குப் பிறகு தமிழக அரசு முழு ஊரடங்கு அமலுக்கு கொண்டு வந்தது அதன் பிறகு படிப்படியாக தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கியது. ஆனால் கோவை மாவட்டத்தில் மட்டும் நாள் ஒன்றுக்கு 2000 வரை அதிகரித்து வந்தது, இந்நிலையில் கடந்த வாரத்தில் இருந்து படிப்படியாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கியது, அதன்படி கடந்த 24 மணி நேரத்தில் கோவை மாவட்டத்தில் 891 பேர் புதிதாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். 

அதேபோல தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்திற்கும் கீழாக குறைந்திருக்கிறது. சென்னையில் மட்டும் நேற்று ஒரே நாளில் 439 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், குறைந்தபட்சமாக பெரம்பலூர் மாவட்டத்தில் 37 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் நேற்று ஒரே நாளில் 189 உயிரிழந்திருக்கிறார்கள் அதேபோல நேற்று ஒரே நாளில் மட்டும் 15281 குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 

PREV
click me!

Recommended Stories

மதத்தின் பெயரால் உணர்வுகளை தூண்டினால் அவரிடம் கவனமாக இருக்க வேண்டும்... கிறிஸ்தவ விழாவில் ஸ்டாலின் பாவ எச்சரிக்கை..!
அனிதா தற்கொலையை திமுக தடுத்து இருக்கலாமே... பூர்ணசந்திரன் மரணத்தை திரித்துக் கூறுவதா..? டாக்டர் சரவணன் ஆவேசம்..!