திமுகவுக்கும்- எங்களுக்கும் கருத்துவேறுபாடு.! எதிர்கட்சியாகவும் செயல்படுவோம்.. ஸ்டாலினை அலறவிட்ட அழகிரி.

By Ezhilarasan BabuFirst Published Jun 22, 2021, 9:52 AM IST
Highlights

ஏழு பேர் விடுதலை தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், குற்றவாளிகளை குற்றவாளிகளாக கருத வேண்டும், வேறு சாயம் பூசக்கூடாது, திமுகவின் கருத்து வேறு எங்களின் கருத்து வேறு என்றார்.  

ஏழு பேர் விடுதலை தொடர்பான கேள்விக்கு குற்றவாளிகளை குற்றவாளிகளாக கருத வேண்டும், என்றும் , அவர்களுக்கு வேறு சாயம் பூசக்கூடாது என்றும், இதில்  திமுகவின் கருத்து வேறு எங்களின் கருத்து வேறு என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே. எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. 
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ். அழகிரி காங்கிரஸ் ஆளுநர் உரை பெரிதும் பாராட்டகூடியது என்றார். மேலும், நீட் தேர்வு குறித்த திமுகவின் முயற்சி புதிய வெளிச்சத்தை புதிய பாதையைக் காட்டி உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.தோழமை கட்சியாக  செயல்படும் வேளையில், அரசுக்கு சொல்ல வேண்டிய கருத்துக்களை ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக, தோழமை கட்சியாக  இருப்போம் என்றார். 

பெட்ரோல் விலை குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், திமுக கட்சி ஆட்சிக்கு வந்து நூறு நாட்கள் மட்டுமே ஆகிறது, அதற்கு மூச்சுவிட அவகாசம் அளிக்க வேண்டும், வரி எய்ப்பு,வரி குறைப்பு மாநில அரசு பொருளாதார நிலை குறித்து எவ்வாறு செயல்படப் போகிறது, உள்ளிட்டவைகளை ஆலோசனை செய்ய ,பொருளாதார நிபுணர்கள் குழுவை நியமித்து இருக்கிறார்கள், நிலைமை சரி செய்யப்படும், உறுதியாகச் சொல்கிறேன், நீங்கள் நம்பிக்கையுடன் எதிர் பார்க்கலாம் நல்லாட்சி தருவார்கள் என்றார்.ஏழு பேர் விடுதலை தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், குற்றவாளிகளை குற்றவாளிகளாக கருத வேண்டும், வேறு சாயம் பூசக்கூடாது, திமுகவின் கருத்து வேறு எங்களின் கருத்து வேறு என்றார். 

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி தனியார் மயமாக்கும் திட்டத்தை காங்கிரஸ் எதிர்க்கிறது, தமிழக அரசு தமிழகத்தின் நிதிநிலை மீது கவனத்தை செலுத்துவார்கள், பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்க கூடாது, தமிழகத்தின் நலன் பாதிக்கும், காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை மதுவிலக்கு என்பதுதான் முடிவு.திமுக  பொறுத்தவரை படிப்படியாக குறைக்கிறோம் என்று கூறியிருக்கிறார்கள். தமிழக பொருளாதார நிதி நிலை ஆதாரத்தை குறித்து ஆலோசனை செய்ய ,தலைசிறந்த பொருளாதார நிபுணர்  ரகுராம் ராஜனை நியமித்தது வரவேற்புக்குரியது.

இதற்காக தமிழக முதலமைச்சரை பாராட்டுகிறேன்.தடுப்பூசி விஷயத்தில் மத்திய அரசு தடுமாறி விட்டது, தரமான பொதுத்துறை நிறுவனங்கள் இருக்கிறபோது, இரண்டு தனியார் தடுப்பூசி நிறுவனங்களுக்கு  எப்படி தடுப்பூசி தயாரிப்பதற்கான அங்கீகாரம் கொடுக்க முடியும்? இது
பாஜகவின் அப்பட்டமான தோல்வியையே காட்டுகிறது.சட்டமன்றத்தில் உறுப்பினர்கள்  எவ்வாறு செயலாற்ற வேண்டும், கருத்து தெரிவிக்கும் போது அது குறித்து முழுமையான தகவல் தெரிவிக்க வேண்டும்.மக்கள் நலன் சார்ந்த அனைத்து பிரச்சினைகளையும் காங்கிரஸ் கட்சி முன்னெடுக்கும், இவ்வாறு கே.எஸ் அழகிரி தெரிவித்தார்.
 

click me!