மோடி அமித்ஷாவின் மாஸ்டர் பிளான் இதுதான்..!! மிரட்டலுக்கு அஞ்சாமல் ரகசியத்தை உடைத்த எம் .பி..!!

By Ezhilarasan BabuFirst Published Dec 17, 2019, 12:45 PM IST
Highlights

இந்தியாவிலேயே  15 முதல் -20%  சத  இஸ்லாமியர்கள் உள்ளனர். அவர்கள் எல்லாம் இரண்டாம் தர பிரஜைகள் என முரட்டுத்தனமாக சொல்வதற்காக கொண்டுவரப்பட்ட சட்டம்.

குடியுரிமை திருத்த சட்டம் வக்கிரமானது, என்றும் இஸ்லாமியர்களை இரண்டாம் கட்ட பிரஜைகளாக மாற்றுவதற்காகவே இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது எனவும் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் எம்பி தெரிவித்துள்ளார், மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் இவ்வாறு தெரிவித்துள்ளார். குடியுரிமை சட்டம் வக்கிரமான சட்டம் இதன் குறிக்கோள் என்னவென்றால் ஒரு முரட்டுத்தனமான செய்தியை பரப்புவதற்காக இந்த சட்டத்தை கொண்டு வந்துள்ளனர். 

அந்த முரட்டுத்தனமான செய்தி என்னவென்றால் இந்தியாவிலேயே  15 முதல் -20%  சத  இஸ்லாமியர்கள் உள்ளனர். அவர்கள் எல்லாம் இரண்டாம் தர பிரஜைகள் என முரட்டுத்தனமாக சொல்வதற்காக கொண்டுவரப்பட்ட சட்டம். வங்காளதேசம். பாகிஸ்தான் , ஆப்கானிஸ்தான் ஆகிய மூன்று  நாடுகளில் இருந்து வந்தவர்களை மத ரீதியாக ஒடுக்கவே இந்த சட்டம் . நேபாளம்,  பூடான் போன்ற நாடுகளில் இருந்து இந்தியா வந்தவர்களுக்கு இந்த சட்டம் பொருந்தாது. அவர்கள் இந்தியா வந்தால் அவர்களுக்கு  குடியுரிமைச் வழங்கப்படும். ஹிட்லரைப் போல இஸ்லாமியர்களை படிப்படியாக இரண்டாம் கட்ட பிரஜைகளாக மாற்றி உள்நாட்டில் அகதிகளாக மாற்றி அவர்களை எப்படி ஹிட்லர் ஒடுக்கினார் அதே போல் ஒடுக்குவரர்கள். 

சுப்பிரமணியசாமி குறித்த கேள்விக்கு  அவர் யார் என்றே எனக்கு தெரியாது என்றார். குடியுரிமை சட்டத்தினால் ஏற்பட்ட கலவரத்திற்கு காங்கிரஸ் தூண்டி விடுகிறது என்ற கேள்விக்கு . வெங்காயம் விலை கூடுவதற்கும் நாங்கள் தான் காரணம் என்று கூறுவார். உள்ளாட்சி தேர்தல் குறித்த கேள்விக்கு ஒரே நேரத்தில் சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல் நடத்தும்போது உள்ளாட்சித் தேர்தல் ஏன் நடத்தவில்லை.  எங்கள் கூட்டணி கட்சிகள் கண்டிப்பாக வெற்றி பெறும் ஆனால் உள்ளாட்சி தேர்தல் ஒரே நேரத்தில் நடத்தப்பட்டிருக்க வேண்டும் என கார்திக் சிதம்பரம் கூறினார். 

click me!