குடியுரிமை சட்டத்தை இணையத்தில் விமர்சிப்பவரா..?? முதலில் இதை படியுங்கள்..!!

Published : Dec 17, 2019, 12:24 PM ISTUpdated : Dec 17, 2019, 04:58 PM IST
குடியுரிமை சட்டத்தை இணையத்தில் விமர்சிப்பவரா..??  முதலில் இதை படியுங்கள்..!!

சுருக்கம்

போலீஸ் மற்றும் சிஆர்பிஎஃப் வீரர்கள் நடத்திய தடியடியால் மாணவர் மாணவியர் பலத்தை காயமடைந்துள்ளனர் இதையடுத்து உத்திரப்பிரதேசத்தில் உள்ள அலிகார் பல்கலைகழக மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு  அவர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது . 

திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வரும் நிலையில் ,  சமூகவலைதளத்தில் போராட்டத்தை தூண்டும் வகையில்  கருத்துக்களை பதிவிடுபவர்களை கண்காணிக்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது இஸ்லாமியர்களுக்கு எதிராக உள்ள பாஜகவின் குடியுரிமை சட்டத்தை வாபஸ் பெறக் கோரி நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் போராட்டங்கள் நடந்து வரும் நிலையில் நேற்று முன்தினம் டெல்லியில் உள்ள ஜாமியா மில்லியா இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு பேரணியில் இறங்கியபோது  போலீசாருக்கும் மாணவர்களுக்கும்  இடையே மோதல் ஏற்பட்டு அது வன்முறையில் முடிந்துள்ளது. 

இது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது ,  போலீஸ் மற்றும் சிஆர்பிஎஃப் வீரர்கள் நடத்திய தடியடியால் மாணவர் மாணவியர் பலத்தை காயமடைந்துள்ளனர் இதையடுத்து உத்திரப்பிரதேசத்தில் உள்ள அலிகார் பல்கலைகழக மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு  அவர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது .   இந்நிலையில் இது ஒவ்வொரு மாநிலத்திற்கும் பரவி வருவதால் தேசிய அளவில் பெரிய அளவில் தாக்கத்தை உருவாக்கி வருகிறது. இதனால்,  ஜமியா மற்றும் அலிகார் பல்கலைகழக  மாணவர்களுக்கு   ஆதரவாக கேரளா, தமிழகம் உள்ளிட்ட இடங்களிலும்  மாணவர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர் இந்நிலையில் அனைத்து மாநிலங்களிலும் குடியுரிமை சட்டம் தொடர்பாக பதிவிடும் அனைவரது  சமூகவலைதள பதிவுகளையும் தீவிரமாக கண்காணிக்க  மத்திய உள்துறை அமைச்சகம்  ஒன்றிய யூனியன் பிரதேச தலைமை அலுவலகங்களுக்கு அறிவு எழுதியுள்ளதாக தெரிகிறது. 

அத்துடன் மக்கள் ,  மாணவர்கள் , போராட்டங்களில் ஈடுபடாமல் இருக்க தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது .  உத்தர பிரதேசம் ,  மீரட் ,  உள்ளிட்ட இடங்களில் போராட்டத்தை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இணையதள சேவை முடக்கம்  மற்றும் ரயில்வே சேவை நிறுத்தம் உள்ளிட்ட நடவடிக்கைகளில் மத்திய அரசு இறங்கியுள்ள  நிலையில் தற்போது  சமூகவலைதள பதிவுகளையும் கண்காணிக்க உத்தரவிட்டிருப்பது  குறிப்பிடத்தக்கது . 

PREV
click me!

Recommended Stories

நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு அப்பாற்பட்டதா திமுக அரசு? விளாசும் இபிஎஸ்
100 பேர் கூட இல்லாத டாக்டர் ராமதாஸ் டெல்லி போராட்டம்..! ஒங்கும் அன்புமணி கை