
தற்போது வரை கொரோனா வைரஸ் தொற்றின் வீரியம் குறையவில்லை என்றும் நோய்தொற்று துவக்க காலத்தை தான் தாண்டியுள்ளது என்றும் உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கூறியுள்ளார். கொரோனா வைரஸ் என்பது நீடித்த நிலைத்திருக்கும் தன்மை கொண்டது. தற்போது வரை அதன் தீவிரத்தன்மை குறையவில்லை என்றும் அவர் எச்சரித்துள்ளார். இது ஒட்டு மொத்த உலக நாடுகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. குறிப்பாக மக்கள் தொகை கொண்ட இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு இது பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில மாதங்களாக வைரஸ் தொற்று என்பது செங்குத்தான வீழ்ச்சியை சந்தித்து இருந்தது. ஆனால் தற்போது அதன் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. சீனா ஆஸ்திரேலியா பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் அந்த வைரஸ் தொற்று பன்மடங்கு வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் இந்தியாவின் தலைநகர் டெல்லி மற்றும் உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் மீண்டும் தோற்று பரவ ஆரம்பித்துள்ளது. கடந்த 7 நாட்களில் மட்டும் 44 சிறுவர்களுக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே நோய்தொற்று நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டுமென மாநில சுகாதார துறைகள் எச்சரித்து வருகின்றன.
இந்நிலையில் இது குறித்த செய்தியாளர்களை சந்தித்த தமிழக மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன். டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் வைரஸ் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது, எனவே தமிழகத்தில் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். முக கவசம் அணிவது சமூக இடைவெளியை கடைபிடிப்பது போன்ற நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை நாம் பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான சர்வதேச சுகாதார ஒழுங்குமுறை விதிகளில் கீழ் 11வது பொதுச்சுகாதார வருடாந்திர கூட்டம், கடந்த 16ஆம் தேதி நடந்தது அதில் உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் ரெட்ரோ சாதனம் தலைமை தாங்கினார். கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர் சந்தித்த அவர்.
தற்போது கொரோனாவுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளை உலக நாடுகள் ஒட்டுமொத்தமாக கைவிட்டுள்ளன இது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது, இது ஆபத்தானதும் கூட, பொதுவாக முக கவசம் அணிவது கைகளைக் கழுவுவது சமூக இடைவெளியை கடைபிடிப்பது தொற்று பரிசோதனைகளை அதிகரிப்பது உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும், தற்போதைய பெருந்தொற்று துவக்க காலத்தை தான் கடந்திருக்கிறது. வைரஸின் வீரியம் இன்னும் குறையவில்லை, கடந்த 30 நாட்களில் ஏற்பட்ட பாதிப்புகளில் 99.2 சதவீதம் ஒமைக்ரான் வைரஸ் தொற்று ஆக உள்ளது.
டெல்டா வகை வைரஸ் 0.1% தான். கொரோனா தடுப்பூசி கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுப்பதில் முக்கிய பங்காற்றி வருகிறது. முன் களப்பணியாளர்கள் சுகாதாரப் பணியாளர்கள் முதியவர்கள் போன்ற அதிக ஆபத்து நிறைந்த நபர்களுக்கு தடுப்பு செலுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும். தற்போது உலக நாடுகள் மற்றும் சுகாதார அமைப்புகள் நோய் தடுப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்த வேண்டும். அதற்கு தயாராக வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.