இது மன்னிக்க முடியாத குற்றம்.. இதை அனுமதிக்கவே முடியாது... கோபத்தில் கொப்பளிக்கும் டாக்டர் ராமதாஸ்..!

Published : Jun 17, 2021, 08:54 PM IST
இது மன்னிக்க முடியாத குற்றம்.. இதை அனுமதிக்கவே முடியாது... கோபத்தில் கொப்பளிக்கும் டாக்டர் ராமதாஸ்..!

சுருக்கம்

பாமக மற்றும் அதன் சார்பு அமைப்புகளின் பொறுப்பாளர்களை விமர்சித்து சமூக ஊடகங்களில் பதிவிடுவதை மன்னிக்க முடியாத குற்றமாக நான் கருதுகிறேன் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் எச்சரித்துள்ளார்.  

இதுதொடர்பாக டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாமக ஒழுங்குக்கும், கட்டுப்பாட்டுக்கும் பெயர் பெற்ற இயக்கம். பாமகவின் நிர்வாகிகளும், தொண்டர்களும் ஒரே குடும்பமாகப் பழகி வருபவர்கள் என்பதுதான் நாம் பெருமைப்படும் விஷயம். அண்மைக்காலமாக பாமக மற்றும் அதன் சார்பு இயக்கங்களின் பொறுப்பாளர்களை விமர்சித்து, சமூக ஊடகங்களில் பதிவிடும் போக்கு தலைத்தூக்கத் தொடங்கியுள்ளது. ஒழுங்குக்கும், கட்டுப்பாட்டுக்கும் எதிரான இப்போக்கை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
பாமக மற்றும் அதன் சார்பு அமைப்புகளின் பொறுப்பாளர்களை விமர்சித்து சமூக ஊடகங்களில் பதிவிடுவதை மன்னிக்க முடியாத குற்றமாக நான் கருதுகிறேன். எனவே, பாமக மற்றும் அதன் சார்பு அமைப்புகளைச் சேர்ந்த எவரும் சம்பந்தப்பட்ட அமைப்புகளின் பொறுப்பாளர்களை விமர்சித்து, சமூக ஊடகங்களில் பதிவிடும் போக்கைக் கைவிடும்படி கேட்டுக்கொள்கிறேன். பொறுப்பாளர்கள் மீது ஏதேனும் குறைகள் இருந்தால் அதை என்னிடம் தெரிவிக்கலாம். அதைவிடுத்து, சமூக ஊடகங்களில் கட்சிப் பொறுப்பாளர்களுக்கு எதிராகப் பதிவிட்டால், அத்தகைய ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபடுபவர்கள் எந்தப் பொறுப்பில் இருந்தாலும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவர் என்பதைக் கண்டிப்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

Union Budget 2026: திருந்தாத மத்திய அரசு..பாஜகவை விளாசிய ராகுல் காந்தி.. நிர்மலா சீதாராமன் பதிலடி!
மத்திய பட்ஜெட்டால் தமிழகத்துக்கு பலன்.. வளர்ச்சி பாதையில் இந்தியா.. பாராட்டித் தள்ளிய இபிஎஸ்!