பல்கலைக்கழக தேர்வில் ஆள்மாறாட்டம்.. வசமாக சிக்கிய பாஜக மாவட்ட தலைவர் - பின்ணணி என்ன ?

By Raghupati RFirst Published Aug 14, 2022, 11:33 PM IST
Highlights

தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த சம்பவத்தில் திருவாரூர் மாவட்ட பாஜக தலைவர் பாஸ்கர் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவாரூர் மாவட்டம், கிடாரம் கொண்டான் திரு.வி.க அரசு கலைக் கல்லூரியில் தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகத்தின் தேர்வுகள் நடைபெற்று வருகிறது. நேற்று பி.ஏ பொலிடிகல் சயின்ஸ் இரண்டாம் ஆண்டிற்கான தேர்வு நடைபெற்றது. தேர்வறையில் மாணவர்களின் ஹால் டிக்கெட்டை பரிசோதிக்கும் போது பாஸ்கர் என்பவருக்கு பதிலாக வேறொரு நபர் தேர்வு எழுத வந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

அதாவது பாஸ்கர் என கூறியவருக்கும், அதில் ஒட்டப்பட்டு இருந்த புகைப்படத்துக்கும் வித்தியாசம் இருந்துள்ளது. இதனையடுத்து உடனடியாக அந்த வாலிபரை தனி அறையில் அமர வைத்து தேர்வு பேராசிரியர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில் அந்த நபர் பெயர் திவாகரன் என்றும், பிளஸ் 2 படித்துவிட்டு தற்போது பிரியாணி கடை வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகளுக்கு..தமிழ்நாட்டில் உங்க விளையாட்டு எடுபடாது.. சமூக விரோதிகளே ! பாஜகவை எச்சரிக்கும் மு.க ஸ்டாலின்

தான் யாருக்கு தேர்வு எழுதுகிறோம் என்பது தெரியாது என்றும், தன்னை திருவாரூர் புலிவலம் பகுதியைச் சேர்ந்த மாவட்ட பாஜக கல்வியாளர் பிரிவு செயலாளர் ரமேஷ் என்பவர் தேர்வு எழுத அனுப்பி வைத்ததாகவும் திவாகரன் பேராசிரியர்களிடம் கூறியுள்ளார். இதுகுது போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட திவாகரன், மாவட்ட பாஜக கல்வியாளர் பிரிவு செயலாளர் ரமேஷ் ஆகியோரை கைது செய்தனர். 

இதில் சம்பந்தப்பட்ட மாவட்ட பாஜக தலைவர் பாஸ்கரும் இன்று கைது செய்யப்பட்டிருக்கிறார். தேர்வில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட சம்பவத்தில் பாஜக நிர்வாகிகள் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஒரு கட்சியின் மாவட்ட தலைவராக இருந்து கொண்டு, தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தது பாஜகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகளுக்கு..“கஞ்சா பூ கண்ணாலே-னு பாட்டு வேற !” கார்த்தியின் விருமனுக்கு ப்ரோமோஷன் செய்யும் ஜெயக்குமார் !

click me!