தமிழகத்தில் தாமரை மலரவே மலராது.. அடித்து சொல்லும் கி.வீரமணி

By Raghupati RFirst Published Aug 14, 2022, 9:37 PM IST
Highlights

முன்னதாக அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் சென்ற கார் மீது பாஜகவினர் காலணி வீசினர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் மதுரை மாவட்டம் புதுப்பட்டியை சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணன் உயிரிழந்தார். நேற்று அவரது உடல் தனி விமான மூலம் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது. அவரது உடலுக்கு நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். 

மேலும் செய்திகளுக்கு..“முக்கிய துறை எல்லாம் போச்சு..” முதல்வரை டம்மியாக்கிய துணை முதல்வர் - மகாராஷ்டிராவில் அதிரடி திருப்பம்!

இதனையடுத்து அவரது உடல் 21 குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்பட்டது. முன்னதாக அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் சென்ற கார் மீது பாஜகவினர் காலணி வீசினர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 6 பேர் மீது மதுரை மாநகர போலீசார் வழக்குப்பதிவு செய்து மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.  

அவர்களுக்கு ஆகஸ்ட் 26-ந்தேதி வரை நீதிமன்ற காவல் பிறப்பித்து மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்நிலையில் இன்டர்ஸ் செய்தியாளர்களை சந்தித்த திராவிட கழக தலைவர் கி.வீரமணி, ‘தமிழகத்தில் உள்ள பாஜகவினர் குண்டர்கள், கூலிப்படையை வைத்துக்கொண்டு நடத்துபவர்கள். பாலக்கோட்டில் உள்ள பாரதமாதா கோயிலை குண்டர்கள் போல் அடித்து நொறுக்கி உள்ளே சென்று மரியாதை செலுத்தினர். அடாவடித்தனம், கூலிப்படை உள்ளிட்டவைகளை தான் வைத்து பாஜகவினர் செயல்பட்டு வருகின்றனர். 

மேலும் செய்திகளுக்கு..தமிழ்நாட்டில் உங்க விளையாட்டு எடுபடாது.. சமூக விரோதிகளே ! பாஜகவை எச்சரிக்கும் மு.க ஸ்டாலின்

பாஜக மாவட்ட செயலாளர்கள் மீது பாலியல் குற்றச் செயல்கள் தான் அதிக அளவில் நடந்து வருகிறது. மாவட்ட பொறுப்பாளர்கள் அனைவரும் பெண்கள் என்றும் பாராமல் பாலியல் குற்றங்களை செய்து வருகின்றனர். தமிழகத்தில் தாமரை மலராது, தமிழகம் என்ற கடல் கடலில் தாமரை மலராது. தமிழகத்தில் திமுக ஆட்சி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. காலைச் சிற்றுண்டி திட்டத்தை தொடங்கி வைத்து மாணவர்களுக்கு நல்ல எதிர்காலத்தை பிறப்பித்துள்ளார் தமிழக முதல்வர். 

பெண்களுக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டு இலவச பேருந்து திட்டத்தை தீட்டி பெண்கள் தடுமாறாமல் இருக்க இலவச பேருந்துக்கு வர்ணங்கள் பூசி பெண்களுக்காக முக்கியத்துவத்தை அளித்து வருகிறார் தமிழக முதல்வர். திமுக ஆட்சி சிறப்பான ஆட்சியாக செயல்படுகிறது மதிப்பெண் அளிக்க வேண்டும் என்றால் நூற்றுக்கு நூறு அல்ல அதற்கும் அதிகமான மதிப்பு கொடுக்கலாம்’ என்று பேசினார்.

மேலும் செய்திகளுக்கு..“கஞ்சா பூ கண்ணாலே-னு பாட்டு வேற !” கார்த்தியின் விருமனுக்கு ப்ரோமோஷன் செய்யும் ஜெயக்குமார் !

click me!