திருப்பத்தூர் மாவட்டம் கண்டிப்பாக வேண்டும்... அடம்பிடிக்கும் எம்.எல்.ஏ..!

By Thiraviaraj RMFirst Published Jul 18, 2019, 5:40 PM IST
Highlights

வேலூர் மாவட்டத்தில் இருந்து திருப்பத்தூர் தனி மாவட்டமாக்க வேண்டும் என திமுக எம்.எல்.ஏ நல்லதம்பி முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் வலியுறுத்தி வருகிறார். 
 

வேலூர் மாவட்டத்தில் இருந்து திருப்பத்தூர் தனி மாவட்டமாக்க வேண்டும் என திமுக எம்.எல்.ஏ நல்லதம்பி முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் வலியுறுத்தி வருகிறார்.

 

கள்ளக்குறிச்சி தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டதை தொடர்ந்து  தென்காசி, செங்கல்பட்டு மாவட்டங்களை பிரித்து புதிதாக அறிவித்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இந்நிலையில், வேலூர், திருச்சியை அடுத்து பெரிய மாவட்டமாக உள்ள வேலூர் மாவட்டத்தில் இருந்து திருப்பத்தூர் மாவட்டத்தை பிரித்து புதிதாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கைகள் வலுத்து வருகிறது. வேலூர் மாவட்டம் அரக்கோணம் பார்டர் திருத்தனி முதல் திருப்பத்தூரை அடுத்த கந்திளி வரை 245 கிலோ மீட்டர் குறுக்கும் நெடுக்குமாக பெரிய மாவட்டமாக பரந்து விரிந்து கிடக்கிறது வேலூர் மாவட்டம். 13 சட்டமன்றத் தொகுதிகள், அரக்கோணம், வேலூர் என எம்.பி தொகுதிகளைக் கொண்டது.

அவ்வளவு பெரிய வேலூர் மாவட்டத்தை பிரித்து திருப்பத்தூரை மையமாகக் கொண்டு ஏலகிரி மாவட்டம் உருவாக்க வேண்டும். வேலூரில் இருந்து திருப்பத்தூர் 95 கிலோ மீர் தூரத்தில் உள்ளது. ஆகையால் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி,  குடியாத்தம், அணைக்கட்டு கே.வி.குப்பம் உள்ளிட்ட பகுதிகளை ஒருங்கிணைத்து புதிய ஏலகிரி மாவட்டத்தை உருவாக்க வேண்டும் என கோரிக்கைகள் வலுத்தன. 

வேலூர் மாவட்டத்தை  திருப்பத்தூர், அரக்கோணம் என மூன்று மாவட்டமாக பிரிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் நீண்டகாலமாக வலியுறுத்தி வருகிறார். கள்ளக்குறிச்சி தனிமாவட்டமாக பிரிக்கப்பட்டபோதே சட்டப்பேரவையில் நல்லதம்பி எம்.எல்.ஏ திருப்பத்தூர் மாவட்டத்தை உருவாக்க வேண்டும் என வலியுறுத்தினார். அப்போது, அமைச்சர் கே.சி.வீரமணி ’உறுதியாக பிரிக்கப்படும்’ என அறிவித்து இருந்தார். 

தென்காசி, செங்கல்பட்டு என இரு புதிய மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ள நிலையில்,   போக்குவரத்து, அடிப்படை பணிகள் கடைமடை பகுதிகளுக்கும் சென்று சேரும் வகையில் திருப்பத்தூர் மாவட்டத்தை பிரிக்க வேண்டும் என நல்லதம்பி எம்.எல்.ஏ கோரிக்கை வைத்துள்ளார்.  

click me!