நம்ப வைத்து கழுத்தறுத்த ஸ்டாலின்... கு.க.செல்வத்தை தொடர்ந்து பாஜகவில் இணைந்த திமுக எம்எல்ஏ..!

Published : Mar 14, 2021, 12:05 PM ISTUpdated : Mar 14, 2021, 12:08 PM IST
நம்ப வைத்து கழுத்தறுத்த ஸ்டாலின்... கு.க.செல்வத்தை தொடர்ந்து பாஜகவில் இணைந்த திமுக எம்எல்ஏ..!

சுருக்கம்

திருப்பரங்குன்றம் தொகுதி திமுக எம்எல்ஏ டாக்டர் சரவணனுக்கு வரும் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதையடுத்து எல்.முருகன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.

திருப்பரங்குன்றம் தொகுதி திமுக எம்எல்ஏ டாக்டர் சரவணனுக்கு வரும் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதையடுத்து எல்.முருகன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது.  இதனால், தமிழக தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. அரசியல் கட்சிகளிடையே கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு தற்போது தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் திமுக வேட்பாளர் பட்டியல் வெளியாகி இருந்தது. 

இந்நிலையில்,  2019ம் ஆண்டு நடைபெற்ற திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் திமுக சார்பில் டாக்டர் சரணவன் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். தற்போது, திமுகவில் மருத்துவ அணியின் மாநில நிர்வாகியாக உள்ளார். இவர் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு மிகவும் நெருக்கமாகவும் இருந்தார். நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலுக்கு திருப்பரங்குன்றம், மதுரை வடக்கு ஆகிய தொகுதிகளில் போட்டியிட விருப்பமனு அளித்தார். ஆனால், மதுரை மாவட்ட திமுக கோஷ்டி பூசல் காரணமாக, திருப்பரங்குன்றம் தொகுதியை, அக்கட்சி விரும்பி கேட்காமலேயே, கூட்டணிக் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு வலுக்கட்டாயமாக தள்ளிவிடப்பட்டது.

மதுரை வடக்கு தொகுதியும் தளபதிக்கு ஒதுக்கப்பட்டது. இதனால், அதிருப்தி அடைந்த டாக்டர் சரணவனின் ஆதரவாளர்கள், திமுகவில் இனி நீடிக்க வேண்டாம். நம்ப வைத்து கழுத்தை அறுத்த கட்சியான திமுகவை விட்டு விலகி சுயேச்சையாக போட்டியிடுவோம் என வலியுறுத்தினர். ஆனால், டாக்டர் சரவணன், தனக்கு பாஜக மேலிடத்தில் உள்ள நெருக்கமான நண்பர்கள் வாயிலாக, இன்று அக்கட்சியின் மாநில தலைவர் முருகன் தலைமையில் பாஜகவில் இணைந்தார்.

சமீபத்தில் அதிமுகவில் சீட் வழங்காததால் அதிருப்தியில் இருந்த சாத்தூர் எம்எல்ஏ ராஜவர்மன் காலை அமமுகவில் இணைந்ததும் மாலையில் அவருக்கு அதே தொகுதியில் சீட் ஒதுக்கி டிடிவி.தினகரன் அதிரடி காட்டினார். அதேபாணியில் டாக்டர் சரவணன் பாஜகவில் இணைந்ததையடுத்து அவருக்கு மதுரை வடக்கு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

ஓ.பி.எஸ்- டிடிவி.தினகரனுக்கு அமித் ஷா போடும் முட்டுக்கட்டை..! தவெகவுக்கு செக் வைக்கும் அமமுக..!
திமுக மீது தவெகவின் திடீர் கரிசனம்.. டெல்லியில் நடந்த மனமாற்றம்..! அடியோடு மாறிய நிர்வாகிகள்..!