ஒருவழியாக காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியானது... திருநாவுக்கரசர், இளங்கோவன் மகன்களுக்கு வாய்ப்பு..!

By vinoth kumarFirst Published Mar 14, 2021, 7:27 AM IST
Highlights

போராட்டம், எதிர்ப்புகளுக்கு இடையே சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் 21 தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 

போராட்டம், எதிர்ப்புகளுக்கு இடையே சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் 21 தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு திமுக கூட்டணியில், பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைக்கு இடையே  25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதனையடுத்து, மார்ச் 11-ம் தேதி காங்கிரஸ் கட்சி போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டது. பின்னர், தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஜான்சிராணி, காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி ஆகியோர் வெளியிட்ட ட்வீட்கள் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சிக் குழப்பம் இருப்பதை உறுதிப்படுத்தியது.

மேலும், கட்சியைக் காட்டிக் கொடுத்தவர்களுக்குச் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் சீட் வழங்குவதாகக் குற்றம் சாட்டி, அக்கட்சியின் எம்.பி. விஷ்ணு பிரசாத், சென்னை சத்தியமூர்த்தி பவனில் தனது ஆதரவாளர்களுடன் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், போராட்டம், எதிர்ப்புகளையும் மீறி காங்கிரஸ் கட்சி தங்களுடைய முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில், வேளச்சேரி, விளவங்கோடு, மயிலாடுதுறை, குளச்சல் ஆகிய தொகுதிகளைத் தவித்து இதர 21 தொகுதிகளின் வேட்பாளர்கள் மற்றும் கன்னியாகுமரி மக்களை தொகுதிக்கான வேட்பாளரும் அறிவிக்கப்பட்டுள்ளனர். 

காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு;-

* பொன்னேரி (தனி) - துரை சந்திரசேகர்

* ஊத்தங்கரை - ஜே.எஸ்.ஆறுமுகம்

* ஸ்ரீபெரும்புதூர் (தனி) - கே.செல்வப்பெருந்தகை

* சோளிங்கர் - ஏ.எம்.முனிரத்தினம்

* கள்ளக்குறிச்சி (தனி) - கே.ஐ.மணிரத்னம்

* ஓமலூர் - ஆர்.மோகன் குமாரமங்கலம்

* ஈரோடு கிழக்கு - திருமகன் ஈவேரா

* உதகமண்டலம் - ஆர்.கணேஷ்

* கோவை தெற்கு - மயூரா எஸ்.ஜெயக்குமார்

* உடுமலைப்பேட்டை - கே.தென்னரசு

* விருத்தாசலம் - எம்.ஆர்.ஆர்.ராதாகிருஷ்ணன்

* அறந்தாங்கி - எஸ்.டி.ராமச்சந்திரன்

* காரைக்குடி - எஸ்.மாங்குடி

* மேலூர் - டி.ரவிச்சந்திரன்

* ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி) - பி.எஸ்.டபிள்யூ மாதவராவ்

* சிவகாசி - ஏ.எம்.எஸ்.ஜி.அசோகன்

* திருவாடனை - ஆர்.எம்.கருமாணிக்கம்

ஸ்ரீவைகுண்டம்: ஊர்வசி எஸ்.அமிர்தராஜ்

* தென்காசி - எஸ்.பழனி நாடார்

* நாங்குநேரி - ரூபி ஆர்.மனோகரன்

* கிளியூர் - எஸ்.ராஜேஷ்குமார்

இந்த வேட்பாளர் பட்டியலில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மகன் திருமுகன் ஈவேரா ஈரோடு கிழக்கிலும், அறந்தாங்கியில் திருநாவுக்கரசர் மகன் ராமச்சந்திரன் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது. இதேபோல், கன்னியாகுமரி மக்களை தேர்தலில் மறைந்த வசந்தகுமாரின் மகன் விஜய்வசந்த் போட்டியிடுகிறார்.

click me!