மீனாட்சி அம்மன் கோவிலில் ஒளிந்துகொண்ட பழனிசாமி..! ஆவி ஸ்பெஷலிஸ்ட் பன்னீர் எங்கே? வெளுத்து வாங்கிய திருநாவுக்கரசர்..!

Asianet News Tamil  
Published : Nov 19, 2017, 12:30 PM ISTUpdated : Sep 19, 2018, 01:28 AM IST
மீனாட்சி அம்மன் கோவிலில் ஒளிந்துகொண்ட பழனிசாமி..! ஆவி ஸ்பெஷலிஸ்ட் பன்னீர் எங்கே? வெளுத்து வாங்கிய திருநாவுக்கரசர்..!

சுருக்கம்

thirunavukkarasar slams palanisamy and panneerselvam

பழனிசாமி, பன்னீர்செல்வம் ஆகியோர் தெய்வமாக வழிபட்ட ஜெயலலிதாவின் வீட்டில் வருமான வரி சோதனை நடந்தபோது, பழனிசாமி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஒளிந்துகொண்டிருந்தார் என திருநாவுக்கரசர் கிண்டலாக விமர்சித்துள்ளார்.

மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நூற்றாண்டு நிறைவு விழா, கோவையில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில், திமுக செயல் தலைவர் ஸ்டாலின், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் திருநாவுக்கரசர், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்த விழாவில் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் திருநாவுக்கரசர், போயஸ் கார்டன் கோவில் என்றும் ஜெயலலிதாவை சாமி என்றும் பழனிசாமியும் பன்னீர்செல்வமும் சொல்லிக் கொண்டிருந்தார்கள். அப்படி அவர்கள் கோவிலாக மதிக்கும் போயஸ் கார்டன் வீட்டில் வருமான வரி சோதனை நடைபெற்றது. அதுகுறித்து இருவரும் வாய்திறக்கவில்லை. 

தன் வீட்டில் ரெய்டு வந்துவிடக்கூடாது என்பதற்காக எதுவுமே தெரியாததுபோல, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பழனிசாமி ஒளிந்துகொள்கிறார். ஆவி ஸ்பெஷலிஸ்ட் பன்னீர்செல்வமும் போயஸ் கார்டன் ரெய்டு பற்றி ஒன்றுமே கூறவில்லை என திருநாவுக்கரசர் சரமாரியாக விளாசித்தள்ளினார்.
 

PREV
click me!

Recommended Stories

திமுக-காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை.. முடிவுகளுக்காக காத்திருக்கிறோம்: கே.சி. வேணுகோபால்
ஈரானிடம் நடுங்கும் டிரம்ப்... அமரிக்க கப்பல்களுக்கு தண்ணீருக்கு அடியில் புதை குழி தோண்டிய காமெனி..!