ஜெயலலிதா சேலை பிடித்து உருவப்பட்டதா..? நிர்மலா சீதாராமன் சொன்னது உண்மையா? திருநாவுக்கரசர் பரபரப்பு விளக்கம்

By Ajmal Khan  |  First Published Aug 13, 2023, 9:10 AM IST

சட்டமன்றத்தில் கருணாநிதியின் முகத்தில் குத்தி விட்டதாக திமுகவினரும், ஜெயலலிதா சேலை பிடித்து இழுக்கப்பட்டதாக அதிமுகவினரும் கூறியது உண்மை இல்லை என திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்


தமிழக சட்ட சபையில் நடந்தது என்ன.?

தமிழக சட்டமன்றத்தில் ஜெயலலிதா அவமரியாதை செய்யப்பட்டதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் தெரிவித்திருந்தார் . இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அப்போது ஜெயலலிதா உடன் இருந்த தற்போதைய காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசு விளக்கம் அளித்துள்ளார். 1989ம் ஆண்டு சம்பவம் நடந்தது. 35 ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவம் பற்றி பேசிய மத்திய மந்திரி நிர்மலா சீத்தாராமன் அரசியலில் இருந்து இருக்க வாய்ப்பு இல்லை.

Latest Videos

undefined

தமிழிசையும் அரசியலில் இருக்க வாய்ப்பு இல்லை. மூப்பனார் காங்கிரஸ் கட்சி தலைவர். தமிழிசை தந்தை குமரி ஆனந்தன் துணை தலைவர். எம்.ஜி.ஆர். மறைவுக்கு பின் கலைஞர் முதலமைச்சர். ஜெயலலிதா பிரதான எதிர்கட்சி தலைவர். 

பட்ஜெட்டை தடுக்க திட்டம்

நான் பிரதான எதிர்கட்சியின் துணை தலைவர். சட்டமன்றத்தில் தற்போது இருப்பது போல் ஆளும்கட்சிக்கும் எதிர்கட்சிக்கும் இடையே இடைவெளி இருக்காது. கலைஞர், அன்பழகன் இருக்கைக்கு எதிர் வரிசையில் ஜெயலலிதா அருகில் நான், மூப்பனார், குமரி ஆனந்தன் அமர்ந்து இருந்தோம். ஏதோ அசம்பாவிதம் நடக்க போகிறது என்பதை முன் கூட்டியே அறிந்த பட்ஜெட்டை டேபிள் போல் வைத்து வாசித்தார். போயஸ் கார்டனில் ஜெயலலிதா தலைமையில் நடந்த 26 எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் பட்ஜெட் வாசிக்க விடாமல் தடுப்பது என முடிவு எடுக்கப்பட்டது. ஜெயலலிதா ராஜினாமா கடிதம் தொடர்பாக பிரச்சனை செய்ய முடிவு எடுக்கப்பட்டது. சட்டமன்றத்தில் கலைஞர் பட்ஜெட் வாசிக்கும் போது பின்னால் இருந்த ஒரு எம்.எல்.ஏ. பட்ஜெட் புத்தகத்தை இழுத்தார். உடனே கலைஞர் சத்தம் போட்டு திரும்பும் போது கண்ணாடி கழுன்று கீழே விழுந்தது. அப்போது தடுமாறினார்.


 

கருணாநிதி மீது தாக்குதல் ?

உடனே மூத்த அமைச்சர்கள் கலைஞரை அழைத்து சென்று விட்டனர். பின்னால் இருந்த திமுக எம்.எல்.ஏ.க்கள் கலைஞர் முகத்தில் குத்தி தாக்கி விட்டதாக நினைத்துவிட்டனர். இதனால் பட்ஜெட் புத்தகங்களை வீசினார். நாற்காலி எல்லாம் எடுத்து வீச முடியாது. மைக்கை உடைத்து புத்தகங்களை வீசி கொண்டு இருந்தனர். ஜெயலலிதாவிற்கு பாதுகாப்பாக நானும் அப்போதைய அதிமுக கொறடா கே.கே.எஸ்.எஸ்.ஆர் நின்றோம். அப்போதும் சில புத்தகங்கள் ஜெயலலிதா தலையில் விழுந்தது. என் மீதும் விழுந்தது. புத்தகம் விழுந்ததால் தலை களைந்தது உண்மை. வீட்டிற்கு போகலாம் என்றதும் ஜெயலலிதா சரி என்றார். உடனே பாதுகாப்பாக அழைத்து வந்து காரில் ஏற்றி வீட்டிற்கு அழைத்து வந்தோம்.

சண்டை, அசம்பாவிதம் நடந்தது எல்லாம் உண்மை தான்.  ஆனால் அடி தடியோ ரத்த காயங்களோ கிடையாது. கலைஞர் முகத்தில் குத்திவிட்டதாக திமுகவும் ஜெயலலிதா சேலை பிடித்து இழத்தாக அதிமுகவும் பிரச்சாரம் செய்தனர். ஆனால் இந்த 2 சம்பவமும் உண்மை கிடையாது. கலைஞர் முகத்தில் குத்தவும் இல்லை. ஜெயலலிதா சேலையை பிடித்து இழக்கவும் இல்லை. கூச்சல், குழப்பம், புத்தகங்கள் வீச்சு நடந்தது உண்மை. 

நிர்மலா சீதாராமனுக்கு பதில்

இது தான் சட்டமன்றத்தில் 35 ஆண்டுகளுக்கு முன் நடந்தது. அப்போது நடந்ததை பார்த்தவர்கள் நான், மூப்பனார், குமரி ஆனந்தன் தான். முப்பனார் உயிருடன் இல்லை. குமரி ஆனந்தனை கேட்டால் சொல்லுவார். இது பற்றி குமரி ஆனந்தன் மகள் தமிழிசைக்கு என்ன தெரியும். நிர்மலா சீத்தாராமனுக்கும் தெரிய வாய்ப்பு இல்லை. பாராளுமன்றத்தில் மகாபாரதம், பாஞ்சாலி கதை வந்ததும் நிர்மலா சீத்தாராமன் ஒரு கதையை சொல்கிறார் என திருநாவுக்கரசர் விளக்கம் அளித்துள்ளார்.

இதையும் படியுங்கள்

காதலித்து கர்ப்பமாக்கி ஏமாற்றி விட்டார்..! பிரபல இளம் கிரிக்கெட் வீரர் மீது பெண் பரபரப்பு புகார்

click me!