1989ஆம் ஆண்டு சட்டப்பேரவைக்குள் நடைபெற்ற அந்த மோசமான சம்பவத்தைப் பற்றிய செய்திகளும் புகைப்படங்களும், அன்றைய நாளிதழ்கள் மற்றும் வார இதழ்களில் வெளியானதை மறந்துவிட்டு ஸ்டாலின் பேசுவது அவர் வகிக்கும் முதலமைச்சர் பொறுப்பிற்கு அழகல்ல.
சட்டப்பேரவைக்குள் நடைபெற்ற அந்த மோசமான சம்பவத்தைப் பற்றிய செய்திகளும் புகைப்படங்களும், அன்றைய நாளிதழ்கள் மற்றும் வார இதழ்களில் வெளியானதை மறந்துவிட்டு ஸ்டாலின் பேசுவது அவர் வகிக்கும் முதலமைச்சர் பொறுப்பிற்கு அழகல்ல என டிடிவி.தினகரன் கூறியுள்ளார்.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரின் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திமுகவை கடுமையாகச் சாடினார். 1989ம் ஆண்டு மார்ச் 25-ம் தேதி தமிழக சட்டமன்றத்தில் ஜெயலலிதாவின் சேலை இழுக்கப்பட்டது. அங்கு அமர்ந்திருந்த திமுகவினர் அவரைப் பார்த்துச் சிரித்தனர் என கூறியிருந்தார். ஆனால், இதை முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
undefined
நிர்மலா சீதாராமன் ஏதாவது வாட்ஸ் அப் வரலாற்றைப் படித்து விட்டுப் பேசுவார். ஜெயலலிதாவுக்குத் தமிழ்நாடு சட்டமன்றத்தில் அப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை. அது ஜெயலலிதாவின் நாடகம் என்பதை அனைவரும் அறிவர் என்று பிரபல ஆங்கில நாளேடுக்கு பேட்டியளித்திருந்தார். இந்நிலையில், உண்மையைத் திரித்து சொல்லியிருப்பது முழு பூசணிக்காயைச் சோற்றில் மறைப்பதற்குச் சமமாகும் என டிடிவி.தினகரன் கூறியுள்ளார்.
இதையும் படிங்க;- வாட்ஸ்அப் வரலாற்றைப் படித்து விட்டு பேசுவார்!அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை!மத்திய அமைச்சருக்கு முதல்வர் பதில்
இதுதொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களை 1989ஆம் ஆண்டு மார்ச் 25 ஆம் நாள் தமிழக சட்டசபையில் தி.மு.க.வினர் எவ்வாறெல்லாம் அநாகரிகமாக நடத்தினார்கள் என்பது தமிழக மக்கள் அனைவரும் அறிந்ததே!
மாண்புமிகு அம்மா அவர்களோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக போட்டி அ.தி.மு.க. என ஆரம்பித்து வெளியேறிய திரு.திருநாவுக்கரசு அவர்கள் சொன்னதாக வெளியான ஒரு செய்தியை மேற்கோள்காட்டி, திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அம்மா அவர்கள் மீது கொலை வெறித்தாக்குதல் நடத்தி துட்சாதன நாடகத்தை அரங்கேற்றிய மூத்த அமைச்சரையும், அதை வேடிக்கை பார்த்த பல சாட்சிகளையும் தன்னுடன் வைத்துக்கொண்டே ஆங்கில பத்திரிகை ஒன்றிற்கு உண்மையைத் திரித்து சொல்லியிருப்பது முழு பூசணிக்காயைச் சோற்றில் மறைப்பதற்குச் சமமாகும்.
1989ஆம் ஆண்டு சட்டப்பேரவைக்குள் நடைபெற்ற அந்த மோசமான சம்பவத்தைப் பற்றிய செய்திகளும் புகைப்படங்களும், அன்றைய நாளிதழ்கள் மற்றும் வார இதழ்களில் வெளியானதை மறந்துவிட்டு திரு.ஸ்டாலின் பேசுவது அவர் வகிக்கும் முதலமைச்சர் பொறுப்பிற்கு அழகல்ல.
இதையும் படிங்க;- எழுதாத பேனாவிற்கு 90 கோடியில் சிலை வைக்க நிதி இருக்குது! மாணவர்களுக்கு லேப்டாப் வழங்க நிதி இல்லையா? டிடிவி.!
அம்மா அவர்கள் உயிருடன் இருந்தவரையில் திரு.மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எவர் ஒருவரும், ஏன் அவரது தந்தை மறைந்த திரு.கருணாநிதி கூட இந்த சம்பவத்தை மறுத்தது இல்லை. ஆனால் அம்மா அவர்கள் உயிருடன் இல்லாத இந்த சமயத்தில் நடந்த சம்பவங்களை மறைக்க முயல்வது அரசியல் நாகரிகம் அல்ல என டிடிவி.தினகரன் கூறியுள்ளார்.