
குஷ்பூக்கு முஸ்லீம் சட்டம் தெரியாது , அந்தம்மாவை கூப்பிட்டு கண்டித்தேன். நீங்களும் வகுப்பெடுங்க தப்பே இல்லை என்று தலைமை இமாமுடன் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் பேசும் பரபரப்பு ஆடியோ வாட்ஸ் அப்புகளில் வெளியாகி வைரலாகி வருகிறது.
நடிகை குஷ்பு சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது காங்கிரஸ் நிலைப்பாட்டுக்கு எதிராக பாஜக கொண்டுவர முயற்சிக்கும் பொது சிவில் சட்டத்தை ஆதரித்து பேசினார்.
அது தவிர முஸ்லீம் சட்டவாரியம் , திமுக ,காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பொதுச்சிவில் சட்டத்தை எதிர்ப்பது குறித்த கேள்விக்கு விமர்சனம் செய்து பேசினார். இது இஸ்லாமிய அமைப்புகளிடையே , இஸ்லாமியர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
காங்கிரசிற்கும் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியது. இது பற்றி காங்கிரஸ் திருநாவுக்கரசரிடம் செய்தியாளர்கள் கேட்டபோது அது அவர்கள் சொந்த கருத்து காங்கிரஸ் கட்சியின் கருத்தல்ல என்று பதிலளித்தார். இந்நிலையில் குஷ்புவின் கருத்துக்கு இஸ்லாமிய அமைப்புகள் , மார்க்க அறிஞர்கள் நேரடியாக காங்கிரஸ் தலைவர்களிடமே தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
அண்ணாசாலை மக்கா பள்ளியின் தலைமை இமாம் திருநாவுக்கரசருடன் பேசும் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் பேசும் நேரடி ஆடியோ காட்சி இதோ:
இமாம்: வணக்கம் திருநாவுக்கரசர் அய்யாவா?
திருநாவுக்கரசர் : ஆமா, நீங்க?
இமாம்: நான் அண்ணா சாலை பள்ளிவாசல் தலைமை இமாம் பேசுகிறேன். உங்கள் அஸ்லம் பாஷா தான் நம்பர் கொடுத்தார்.
திருநாவுக்கரசர் : அப்படியா சொல்லுங்கள்.
இமாம்: ஒன்றுமில்லை, உங்கள் செய்தி தொடர்பாளர் குஷ்பூ பொது சிவில் சட்டம் பற்றி பேசியது முஸ்லீம் மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கு.
திருநாவுக்கரசர் : ஆமா , அந்தம்மா பேசியதை அழைத்து கண்டித்து விட்டேன், அது அந்தம்மா சொந்த கருத்துன்னு சொல்லிட்டேன்.
இமாம்; அது சரி பாஜக சுப்ரமணியம் சாமியை விட்டு பேச சொல்லிவிட்டு அது அவர் தனிப்பட்ட கருத்து என்பது போல் காங்கிரஸ் கட்சியும் செய்கிறது எனபது போல் எடுத்து கொள்ளலாமா?
திருநாவுக்கரசர் : அனாவசியமாக சதேகப்படவேண்டாம் , அதுக்கு மேலே இதை வைத்து கட்சியை விட்டு தூக்கமுடியுமா?
இமாம்: அப்படி சொல்லவில்லை, இஸ்லாமை பற்றி யார் வேண்டுமானாலும் பேசலாம் , பேச உரிமை இருக்கிறது.
திருநாவுக்கரசர் : அந்தம்மா , இஸ்லாம் பற்றி பார்த்து பேசி இருக்கணும்.
இமாம்: அதுதான் தெரிஞ்சுகிட்டு பேசணும் ,இஸ்லாம் பற்றியும் தெரியவில்லை, அந்தம்மா பிராக்டிகலா முஸ்லீமாக இல்லை. நீங்கள் இஸ்லாமிய மக்களிடம் பழகுகிறீர்கள் உங்களுக்கு தெரியும் , அந்த அளவுக்கு கூட அவங்களுக்கு தெரியல..
திருநாவுக்கரசர் : கரெக்ட் , அந்தம்மா இந்து ஆளை திருமணம் செஞ்சுருக்காங்க. முஸ்லீமாக எல்லாம் பிராக்டிகலா கிடையாது. அது பற்றியும் தெரியாது. கூப்பிட்டும் கண்டித்து சொல்லிவிட்டேன், பிரஸ் மீட்டிலும் இரண்டு தடவை எதிர்த்தும் சொல்லிவிட்டேன். நேரா கூப்பிட்டு கண்டிச்சுட்டேன்
இமாம்: சமூக வலை தளங்களில் அவங்க பேட்டி பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கு, பொதுமக்கள் மத்தியில் கொந்தளிப்பு உருவாகியிருக்கு. மார்க்க அறிஞர்கள் என்ன தீர்மானிச்சுருக்கோம் என்றால் பொது சிவில் சட்டத்தை எதிர்ப்பதோடு , குஷ்பூவையும் எதிர்த்து போராட்டம் அறிவிக்கலாமா என்று யோசிக்கிறோம்.
திருநாவுக்கரசர் : ஆமாம் , தடா ரஹீம் கூட வந்து பேசினார், கட்சியை விட்டு நீக்கணும்னு கேட்டுகிட்டார். அதற்கு பிறகுதான் அந்தம்மாவை கூப்பிட்டு வார்ன் பண்ணினேன். நீங்கள் பார்ட்டியில் இருக்கிரீர்கள், நீங்கள் முஸ்லீம் பெண் என்பதால் முஸ்லீம் மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பு இருந்தது.கூட்டங்களில் இஸ்லாமிய பெண்கள் பர்சனலாக உங்களுக்காக கையாட்டுவதை பார்த்திருக்கிறேன்.
அதை ஏன் கெடுத்துக்குறீங்க என்று கேட்டேன். முற்போக்காக பேசுவதாக நினைத்துகொண்டு தவறு செய்கிறீர்கள், கண்டிப்பாக இதனால் பிரச்சனைத்தான் வரும். இது பொதுவான கருத்து கிடையாது.ஷரியத் சட்டம் உயிர்மூச்சாக உள்ளது. இதை எதிர்க்கிறீர்கள் இதற்கு எதிராக முஸ்லீம்கள் மட்டுமல்ல காங்கிரஸ்காரர்கள் கூட நிற்க மாட்டார்கள் என்று எச்சரித்து சொல்லிவிட்டேன். அறிவுறுத்திட்டேன் , பார்த்துக்கலாம் பிரதர்.
இமாம்: நன்றி அய்யா , நாங்களும் அவங்களை கூப்பிட்டு எஜுகேட் பண்ணலாமான்னு யோசிக்கிறோம். இதுதான் இஸ்லாம் இதை தெரிஞ்சுகொள்ளுங்கள் என்று சொல்லலாம்னு இருக்கோம்.
திருநாவுக்கரசர் : ஹா,ஹா...ஹா (சிரிக்கிறார்) பண்ணுங்க பண்ணுங்க , தப்பே இல்லை.கூப்பிட்டு பேசுங்க .
இவ்வாறு அந்த ஆடியோ வாய்சில் உள்ளது.
<iframe width='100%' height='400' src='http://www.youtube.com/embed/9zS6In3zpIU'></iframe>