அரசியலில் இந்த பிரச்சனைகள் எல்லாம் சகஜமப்பா.? தமிழக காங்கிரஸ் தலைவர் மாற்றும் கோரிக்கைக்கு திருநாவுகரசர் பதில்

By Ajmal KhanFirst Published Nov 22, 2022, 8:05 AM IST
Highlights

திமுக-காங்கிரஸ் கூட்டணி வரும் நாடாளுமன்ற சட்டமன்ற தேர்தலிலும் தொடரும் என காங்கிரஸ் மூத்த தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருநாவுக்கரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

முதலமைச்சரை சந்தித்த திருநாவுகரசர்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலகத்தில் மாநில அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில்  கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர், முதலமைச்சர் தலைமையிலான மாநில அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாக தெரிவித்தார்.  தாலுக்கா மருத்துவமனைகளில் டயலாசிஸ் வசதி, கேன்சர் நோய்களுக்கான சிகிச்சை ஏற்படுத்தி தர வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்துள்ளதாக தெரிவித்தார்.  

நாடாளுமன்ற தேர்தலை பற்றி எங்களுக்கு எந்த கவலையும் இல்லை... அமைச்சர் ஐ.பெரியசாமி அதிரடி!!

கடல் அலைகள் போல் பிரச்சனைகள் சகஜம்

இதனை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்டுள்ள மோதல் தொடர்பான் கேள்விக்கு திருநாவுகரசர் பதில் அளித்தார். அப்போது கட்சி என்று இருந்தால் கருத்து வேறுபாடுகள் இருப்பது சகஜம் இவை பேசி சரி செய்ய வேண்டிய விஷயம் என்றார். கடல் என்று இருந்தால் அலைகள் இருப்பது போல கட்சி என்று இருந்தால் பிரச்சனைகள் இருப்பது இயல்பு எனவும் இவை தமிழக காங்கிரஸ் கட்சியை ஒருபோதும் பாதிக்காது என திட்டவட்டமாக தெரிவித்தார். தமிழக காங்கிரஸ் தலைவரை மாற்றம் செய்வது தொடர்பாக டெல்லியில் மூத்த காங்கிரஸ் தலைவர்கள் முகாமிட்டிருப்பது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர்,  தமிழக காங்கிரஸ் கமிட்டிக்கு புதிய தலைவரை நியமிப்பது தொடர்பான முடிவுகள் அகில இந்திய காங்கிரஸ் தலைமை முடிவு செய்ய வேண்டிய விஷயம்  எனவும் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் டெல்லி சென்று காங்கிரஸ் தலைமையை சந்திப்பது வழக்கமான ஒன்று எனவும் கூறினார். 

திமுக தொண்டர்களிடையே அடிதடி... ஒருவரை ஒருவர் மாறி மாறி தாக்கிக்கொண்டதால் பரபரப்பு!!

திமுகவுடன் கூட்டணி தொடரும்

திமுக-காங்கிரஸ் கூட்டணி தெளிவாக உள்ளது எனவும் எதிர் வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலிலும் கூட்டணி தொடரும் எனவும் உறுதிபட தெரிவித்தார்.தமிழகத்தில் திமுக, அதிமுக வுக்கு பிறகு காங்கிரஸ் பெரிய கட்சி தான். தமிழகத்தில் பா.ஜக வளர்ந்து ஆட்சியை எல்லாம் பிடிக்க முடியாது என விமர்சித்த அவர் காங்கிரஸ் தலைமையில் கூட்டணி என பேசுபவர்கள் , பா.ஜ.க அதிமுக கூட்டணியிலிருந்து விலகி பா.ஜ.க தலைமையில் கூட்டணி அமைக்குமா என கேள்வி எழுப்புவதில்லை என தெரிவித்தார். 

இதையும் படியுங்கள்

தூங்கும் புலியை சீண்டி பார்க்காதீங்க தினகரன்! அதிமுகவை பற்றி பேச உங்களுக்கு எந்த தகுதியும் இல்லை!மாஃபா விளாசல்

click me!