
தமிழகம் வருகிறார் ராகுல் !
டெல்லியில் ராகுலை திருமாவளவன் சந்தித்தபோது, தேசம் காப்போம் என மதவாத ஸக்திகளுக்கு எதிராக ஒரு மாநாட்டை ஜூன் மாதம் நடத்த சிறுத்தைகள் திட்டமிட்டிருப்பதை ராகுலிடம் விவரித்துவிட்டு, அதில் கலந்துகொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டிருக்கிறார் திருமா. வருவதாக உறுதி தந்துள்ளார் ராகுல்.
இது ஒருபுறம் இருக்க,
தேர்தல் எப்போது வந்தாலும் அதை எதிர்கொள்ளும் முகமாக, பூத் கமிட்டிகளை அமைப்பது குறித்து விவாதிப்பதற்காக, காங்கிரஸ் நிர்வாகிகளை மாவட்டம் தோறும் சுற்றுப்பயனம் செய்து வருகிறார் திருநாவுக்கரசு. இந்த பயணத்தை மே மாதத்திற்குள் முடிக்க திட்டமிட்டுள்ளார். அதன்பிறகு, ஸ்டாலின் நடத்திய நமக்கு நாமே
பயணத்தைப் போல, ' மக்கள் தரிசனம் ' எனும் நடை பயணத்தை துவக்குகிறார் திருநா. இதற்கு ராகுலிடம் அனுமதி வாங்கியுள்ளார். அதேசமயம், இந்த பயணத்தின் போது, தமிழகத்தில் 4 பாயிண்டுகளில் ராகுல் கலந்துகொள்ளவேண்டும் என கோரிக்கை வைத்திருக்கிறார். ராகுலும் அதற்கு ஒப்புதல் தந்திருக்கிறார்.
ஜூன், ஜூலையில் தமிழகத்தில் ராகுலின் விசிட் அடிக்கடி இருக்கும்