அமமுக வேட்பாளர் பாஜகவில் இணைந்தார்... அதிர்ச்சியில் டிடிவி.தினகரன்..!

Published : Mar 26, 2021, 06:53 PM ISTUpdated : Mar 26, 2021, 07:01 PM IST
அமமுக வேட்பாளர் பாஜகவில் இணைந்தார்... அதிர்ச்சியில் டிடிவி.தினகரன்..!

சுருக்கம்

புதுச்சேரியில் திருநள்ளார் தொகுதி அமமுக வேட்பாளர் தர்பாரண்யம் மத்திய அமைச்சர்கள் முன்னிலையில் பாஜகவில் இணைந்த சம்பவம் டிடிவி.தினகரனுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

புதுச்சேரியில் திருநள்ளார் தொகுதி அமமுக வேட்பாளர் தர்பாரண்யம் மத்திய அமைச்சர்கள் முன்னிலையில் பாஜகவில் இணைந்த சம்பவம் டிடிவி.தினகரனுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 6ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. இதனால், அரசியல் கட்சி தலைவர்களும், வேட்பாளர்களும் அவர்கள் போட்டியிடும் தொகுதிகளில் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலை அடுத்த திருநள்ளாறு தொகுதியின் அமமுக வேட்பாளர் தர்பாரண்யேஸ்வரன் பாஜகவில் இணைந்தார். மத்திய அமைச்சர்கள் கிரிராஜ் சிங், அர்ஜுன்ராம் மேக்வால் முன்னிலையில் அவர் பாஜகவில் இணைந்தார். அதேபோல் திமுகவிலிருந்து விலகிய முன்னாள் எம்.எல்.ஏ ஏ.ஜி சம்பத், சிடி ரவி முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். காலையில் அமமுக பரப்புரையில் ஈடுபட்டு மாலையில் பாஜகவில் தர்பாரண்யம் இணைந்துள்ளதால் அமமுக தொண்டர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். 

PREV
click me!

Recommended Stories

பாமக பிரச்சனைக்கு திமுக தான் காரணம்.. ராமதாஸை சுற்றி தீய சக்திகள்.. ஒரே போடாக போட்ட அன்புமணி!
ஒரு தலைவருக்கு இது கூடவா தெரியாது.. விஜய்யை கழுவி ஊற்றிய புதுச்சேரி அமைச்சர்.. என்ன விஷயம்?