2வது நாளாக தொடரும் ஐ.டி. ரெய்டு.. பிரச்சாரம் ரத்து... கிடுக்குபிடி விசாரணையில் எ.வ.வேலு..!

By vinoth kumarFirst Published Mar 26, 2021, 6:34 PM IST
Highlights

திருவண்ணாமலை தொகுதியில் தீவிர பிரசாரம் செய்து வந்த எ.வ.வேலு வருமான வரி சோதனை காரணமாக இன்று பிரசாரத்திற்கு செல்லவில்லை.

திருவண்ணாமலை தொகுதியில் தீவிர பிரசாரம் செய்து வந்த எ.வ.வேலு வருமான வரி சோதனை காரணமாக இன்று பிரசாரத்திற்கு செல்லவில்லை.

தமிழக சட்டமன்ற ஏப்ரல் 6ம் தேதி நடைபெறுகிறது. இதனால், தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. மறுபக்கம் வருமானவரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நேற்று  திருவண்ணாமலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டிருக்கும் நிலையில், அத்தொகுதி வேட்பாளர்  எ.வ.வேலுவிற்கு சொந்தமான கல்லூரி, அறக்கட்டளை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடைபெற்றது. அதேபோல் அவரது உறவினர்கள், நண்பர்கள் ஆகியோரின் வீடுகள் மற்றும் அவர்களுக்கு சொந்தமான இடங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். 

வாக்காளர்களுக்குப் பணப்பட்டுவாடா செய்வதாக புகாரை தொடர்ந்து இந்த சோதனை நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகின. நேற்று தொடங்கிய சோதனை 2ம் நாளாக இன்றும் நீடித்து வருகிறது. இதில், சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


 
இந்நிலையில், வருமான வரித்துறை சோதனையால் திமுக வேட்பாளர் எ.வ.வேலு அவரது தேர்தல் பிரச்சாரத்தை ரத்து செய்துள்ளார். இன்று அவர் திருவண்ணாமலையின் நகர் பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்த நிலையில், வருமான வரித்துறை சோதனையால் அவரது பரப்புரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

click me!