உங்கள் பிரதமரே ஊடகத்தை எதிர்கொள்ள மறுப்பவர் தானே.. அண்ணாமலையை பங்கம் செய்த திருமுருகன் காந்தி.!

Published : Sep 23, 2021, 02:02 PM IST
உங்கள் பிரதமரே ஊடகத்தை எதிர்கொள்ள மறுப்பவர் தானே.. அண்ணாமலையை பங்கம் செய்த திருமுருகன் காந்தி.!

சுருக்கம்

 இயக்கங்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லமுடியாது, ஏன்னா, நாங்க இந்தியாவுல பெரிய கட்சி, அதிகாரத்துல இருக்குற கட்சி' என அண்ணாமலை சொல்கிறார். அவ்வளவு பலம்பொருந்திய கட்சி ஏன், மே17 இயக்கத்தை டி.வி விவாதங்களுக்கு அழைக்கக்கூடாதென கட்டளை இடவேண்டும்? அவர்கள் வந்தால் வரமாட்டோம் என அடம்பிடிக்க வேண்டும்? 

அரசியல்-ஆடுகளை மேய்ப்பவர்களுக்கு அறிவுசார் அரசியல் அச்சுறுத்தவே செய்யும் என்று மே-17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி ஆவேசமாக தெரிவித்துள்ளார்.  

 மே-17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி விமர்சனம் தொடர்பாக பாஜக தலைவர் அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு பதிலளித்த அவர்;- மாத பெயரில் நாள் பெயரில் வைத்தவர்களுக்கெல்லாம் பதில் அளிக்க முடியாது என்றும், மேலும் நாங்கள் 18 கோடி உறுப்பினர்களை கொண்ட மிகப்பெரிய கட்சி நாட்டினை ஆளும் கட்சி, பல மாநிலங்களில் ஆளும் கட்சி,அதனால் இந்த டிவிட்டரு, லெட்டர் பேடு கட்சிக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது. என கடுமையாக விமர்சித்திருந்தார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில், அண்ணாமலைக்கு திருமுருகன் காந்தி பதிலடி கொடுத்துள்ளார். 

இதுகுறித்து மே-17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- இயக்கங்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லமுடியாது, ஏன்னா, நாங்க இந்தியாவுல பெரிய கட்சி, அதிகாரத்துல இருக்குற கட்சி' என அண்ணாமலை சொல்கிறார். அவ்வளவு பலம்பொருந்திய கட்சி ஏன், மே17 இயக்கத்தை டி.வி விவாதங்களுக்கு அழைக்கக்கூடாதென கட்டளை இடவேண்டும்? அவர்கள் வந்தால் வரமாட்டோம் என அடம்பிடிக்க வேண்டும்? 

4 வருடமாக விவாதங்களில் தடைசெய்தாலும், வழக்கு போட்டு மிரட்டினாலும், பொதுகூட்டங்களை தடைசெய்தாலும் எமது கேள்வி மக்களை சென்றடைகின்றன. உங்கள் பிரதமரே ஊடகத்தை எதிர்கொள்ள மறுப்பவர் தானே. 'அரசியல்-ஆடுகளை' மேய்ப்பவர்களுக்கு அறிவுசார் அரசியல் அச்சுறுத்தவே செய்யும்  என்று பதிவிட்டுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

vande mataram: வந்தே மாதரம்தான் நம் விசுவாசத்தின் அடையாளமா..? தேசபக்தியை மதத்துடன் இணைக்காதீர்கள்..! ஒவைசி எச்சரிக்கை..!
திமுக ஆட்சியில் அதிகாரிகளின் ராஜ்ஜியம் நடக்கிறது..! வெறுப்பில் அதிமுகவில் இணைந்த செங்கோட்டையன் அண்ணன் மகன்..!