கூட்டுறவுத்துறையில் கவரிங் நகைகளுக்கும் கடன் வழங்கப்பட்டுள்ளதாகவும், முறைகேடுகள் தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும், கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
கூட்டுறவுத்துறையில் கவரிங் நகைகளுக்கும் கடன் வழங்கப்பட்டுள்ளதாகவும், முறைகேடுகள் தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும், கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
undefined
திண்டுக்கலில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஐ.பெரியசாமி , “கூட்டுறவுத்துறையில் நடைபெற்றுள்ள முறைகேடுகள், விதிமீறல்கள் ஆய்வு செய்யப்பட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் எந்த அளவுக்கு அவர்கள் தவறாக பயன்படுத்தி உள்ளார்கள் என்பது குறித்து ஆய்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. தகுதியுள்ளவர்கள் அனைவருக்கும் 5 பவுன் நகை கடன் தள்ளுபடி செய்யபடும், அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டு வருகிறது.
முறைகேடுகள், விதிமீறல்களில் யார் ஈடுபட்டு இருந்தாலும் அவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை அரசு எடுக்கும். நகை இல்லாமல் கடன் வழங்கபட்டு உள்ளது. சங்கங்களில் நகை இல்லை. கவரிங் நகைகளுக்கும் கடன் வழங்கி உள்ளனர். குடும்ப அட்டை, ஆதார் அட்டைகளுக்கு 500க்கணக்கான கடன்கள் வழங்கபட்டுள்ளது. நிறைய விதிமீறல்கள் நடைபெற்று உள்ளது. இவையெல்லாம் சங்கங்களில் வங்கிகளில் ஆய்வு செய்யபட்டு உரிய கிரிமினல் நடவடிக்கை அரசு மேற்கொண்டு வருகிறது.
பயிர்கடன் சம்மந்தமாக ஆய்வு செய்த போது குறிபிட்ட பகுதிகளில் தான் இந்த கடன் அதிகமாக வழங்கபட்டு உள்ளது. ஒரு ஏக்கருக்கு 20 ஆயிரம் வழங்க வேண்டும் என்றால் 80 ஆயிரம் வழங்கி உள்ளனர். விவசாயம் செய்யாதவர்களுக்கு கூட ரூ.3 இலட்சம் வரை கடன் கொடுத்துள்ளனர். தரிசு நிலங்களுக்கு கடன் வழங்கி உள்ளனர். ஒரு அளவு இல்லாமல் அவர்கள் இஷ்டபடி கடன் வழங்கி உள்ளனர். நிலம் இல்லாதவர்களுக்கும் கடன் கொடுக்கபட்டு உள்ளது. குவாரி நிலங்களுக்கு கடன் வழங்கி உள்ளதும் ஆய்வில் தெரிய வந்தது” என அவர் கூறினார்.