1 முதல் 8ம் வகுப்புக்கு பள்ளிகள் திறப்பது எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் சொன்ன முக்கிய தகவல்..!

By vinoth kumarFirst Published Sep 23, 2021, 1:17 PM IST
Highlights

1ம் வகுப்பு முதல் பள்ளிகளை திறக்க தனியார் பள்ளிகள் கேட்டு வருகின்றன. பெற்றோர் மத்தியில் தற்போது வரை கொரோனா அச்சம் இருப்பதால் பள்ளி திறப்பு பற்றி முடிவு செய்யவில்லை.

1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகளை திறப்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் கொரோனா தாக்கம் பெருமளவு குறைந்ததையடுத்து அரசு வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடித்து செப்டம்பர் 1-ம் தேதி முதல் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. ஆனாலும்,  மாணவர்கள் பள்ளிகளுக்கு வருவது கட்டாயம் இல்லை எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனிடையே, பள்ளி திறந்த சில நாட்களிலேயே மாணவர்கள், ஆசிரியர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றன. 

இந்த சூழலில் 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி திறப்பது குறித்து பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டுள்ளதாகவும், இது தொடர்பாக முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் ஆலோசனை நடைபெற்றது. அத்துடன் இக்கூட்டத்தின் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து முதல்வரிடம் அமைச்சர் அன்பில் மகேஷ் அறிக்கை சமர்த்திருந்தார். 

இந்நிலையில், கோவயைில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்;- 1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகளை திறப்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. பள்ளிகள் திறப்பு பற்றி தொடர்ந்து ஆலோசனை நடந்து வருகிறது. 1ம் வகுப்பு முதல் பள்ளிகளை திறக்க தனியார் பள்ளிகள் கேட்டு வருகின்றன. பெற்றோர் மத்தியில் தற்போது வரை கொரோனா அச்சம் இருப்பதால் பள்ளி திறப்பு பற்றி முடிவு செய்யவில்லை என தெரிவித்துள்ளார். 

click me!