அடி தூள்.. விவசாயிகளுக்கு 1 லட்சம் புதிய மின் இணைப்பு.. கெத்தா தொடங்கி வைத்த முதலமைச்சர் ஸ்டாலின்.

By Ezhilarasan BabuFirst Published Sep 23, 2021, 1:24 PM IST
Highlights

திட்டத்தை துவக்கி வைத்து பின்னர் உரையாற்றிய ஸ்டாலின் கூறியதாவது, ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் பல்வேறு நலத்திட்டங்கள் தொடங்கி அது நடைமுறையில் இருந்து வருகிறது. அரசின் திட்டங்களை செயல்படுத்துவதில் அமைச்சர்கள் போட்டி போட்டுக் கொண்டு செயல்படுகின்றனர்.

கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில்  மின்சாரத்துறை செழிப்பாக இருக்கிறது என்று யாரும் நினைத்து விட வேண்டாம், அது மிக மோசமாகச் சீரழிக்கப்பட்டிருக்கிறது என தமிழக முதலமைச்சர் மு. க ஸ்டாலின் வேதனை தெரிவித்துள்ளார். மண்ணையும் மக்களையும் காப்பதில் எப்போதும் யாருக்கும் சளைக்காத ஆட்சிதான் திமுக ஆட்சி என்றும் அவர் கூறியுள்ளார்.

திமுக ஆட்சி பொறுப்பை ஏற்றதும் முதல் பல்வேறு அதிரடி திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது. பல விஷயங்களில் திமுகவின் ஆட்சி மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. மின் வினியோக விவகாரத்தில் மட்டும் அங்கொன்றும் இங்கொன்றுமாக சில சர்ச்சைகள் எழுந்தவண்ணம் உள்ளது. ஆனால் இது குறித்து விளக்கம் அளித்துள்ளார் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அதிமுக ஆட்சியில் மின் கட்டமைப்புகள் முறையாக பராமரிக்கப்படாததால் ஆங்காங்கே மின் தடை ஏற்படுவதாக கூறியுள்ளார்.ஆனால் விரைவில் மின் கட்டமைப்புகள் ஒவ்வொன்றாக சீரமைக்கப்பட்டு அனைத்தையும் சரி செய்யும் பணியின் மின்சார வாரியம் தீவரமாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில், ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கும் விழா தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. 

திட்டத்தை துவக்கி வைத்து பின்னர் உரையாற்றிய ஸ்டாலின் கூறியதாவது, ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் பல்வேறு நலத்திட்டங்கள் தொடங்கி அது நடைமுறையில் இருந்து வருகிறது. அரசின் திட்டங்களை செயல்படுத்துவதில் அமைச்சர்கள் போட்டி போட்டுக் கொண்டு செயல்படுகின்றனர். தற்போது தொடங்கப்பட்டுள்ள  விவசாயிகளுக்கு ஒரு லட்சம் மின் இணைப்பு வழங்கும்  திட்டம் தலைமுறை தலைமுறைக்கு விவசாயிகளுக்கு பலன் தரக்கூடியது. தமிழகத்தின் உணவு உற்பத்தி பன்மடங்க அதிகரிக்க இது உதவும் என்றார்.  மேலும், திமுக ஆட்சிக்கு வந்து நான்கு மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மின்னிணைப்பு கொடுக்க உள்ளோம். இதைவிட ஒரு வேகமான ஆட்சி இந்தியாவில் இருக்க முடியாது என்ற அளவிற்கு நாம் செயல்பட்டு வருகிறோம் என்றார்.

இந்த மின் இணைப்புகளை பெரும்பாலும் இலவசமாக வழங்குகிறோம், இதையெல்லாம் பார்த்து கடந்த 10 ஆண்டு அதிமுக ஆட்சியில்  மின்சார வாரியம் செழிப்பாக இருக்கிறது என்று யாரும் நினைத்து விட வேண்டாம் . அவர்கள் ஒட்டு மொத்தமாக மின்சார துறையையே சீரழித்து விட்டுப் போயிருக்கிறார்கள். 1.5 லட்சம் கோடி மின்வாரியம் கடனில் இருக்கிறது. ஆண்டுக்கு  16 ஆயிரம் கோடி கடன் கட்ட வேண்டிய நிலைமையில் இருக்கிறது. தனியாரிடமிருந்து அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்தார் அவர். 

click me!