கமலுக்கு அழைப்பு விடுத்த திருமா...! எதற்கு தெரியுமா?

Asianet News Tamil  
Published : Feb 15, 2018, 10:21 PM ISTUpdated : Sep 19, 2018, 01:57 AM IST
கமலுக்கு அழைப்பு விடுத்த திருமா...! எதற்கு தெரியுமா?

சுருக்கம்

thirumavalavan welcome to kamal

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எழுதிய புத்தக வெளியிட்டு விழாவிற்கு நடிகர் கமலஹாசனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

திருமாவளவன் இணைய பக்கத்தில் 'அமைப்பாய் திரள்வோம்' என்ற தலைப்பில் கட்டுரைகள் எழுதி வந்தார். 

தற்போது அந்த கட்டுரைகள் புத்தகமாக வடிவமைக்கப்பட்டு வெளிவந்துள்ளது. இதில் திருமாவளவனின் 40க்கும் மேற்பட்ட கட்டுரைகள் இடம்பெற்றுள்ளது. 

இந்த புத்தகத்தின் பிரதியை கடந்த மாதம் நடைபெற்ற சென்னை புத்தக கண்காட்சியில் திருமாவளவன் வெளியிட்டார். 

அப்போது புத்தகத்தை வெளியிட்டு பேசிய திருமாவளவன், முறைப்படி அரசியல்வாதிகளை அழைத்து புத்தக வெளியீட்டு விழா நடத்தப்படும் என தெரிவித்திருந்தார். 

அதன்படி அந்த புத்தகத்தை திருமாவளவன் முக்கிய தலைவர்களை சந்தித்து வழங்கிக் கொண்டு இருக்கிறார். 

அந்த வரிசையில், அமைப்பாய் திரள்வோம் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்க கமல்ஹாசனுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி அழைப்பு விடுத்துள்ளது. 

அந்த அமைப்பின் துணை பொதுச் செயலாளர் வன்னியரசு கமல்ஹாசனை நேரில் சந்தித்து அழைப்பிதழை வழங்கியதாக கூறப்படுகிறது.

PREV
click me!

Recommended Stories

அடிமாடாய் போன தேமுதிக.. திமுகவில் 4 சீட்டு..! பேராசையால் மண்ணைக் கவ்விய பிரேமலதா..!
ரணகளத்திலும் குதூகலம்..! எடப்பாடிக்கு சேலஞ்சு விடும் ஸ்டாலின்..!