பொதுவாக சினிமாவில் இருப்பவர்கள் புகழ் இருந்தால் போதும் முதல்வராகி விடலாம் என்ற எண்ணத்தோடு அரசியலுக்கு வருகின்றனர். தமிழகத்தில் மட்டுமே இந்த சாபக்கேடு இருக்கிறது. மற்ற மாநிலங்களில் திரையுலகத்தைச் சார்ந்தவர்கள் அவர்களது வேலையை மட்டுமே செய்கின்றனர் என திருமாவளவன் தெரிவித்திருந்தார்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை பார்த்து சாபக்கேடு என்று சொல்லும் அளவுக்கு திருமாவளவனுக்கு எப்படி தைரியம் வந்தது? என நாராயணன் திருப்பதி கிண்டலாக கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ மாணவிகளுக்கு கடந்த வாரம் ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ்களை வழங்கி கவுரவித்தார். அப்போது மாணவர்கள் மத்தியில் பேசிய அவர் மாணவ மாணவிகள் அம்பேத்கர், பெரியார், காமராஜர் போன்ற தலைவர்கள் குறித்து படிக்க வேண்டும் என வலியுறுத்தினார். நடிகர் விஜய்யின் இந்த பேச்சு குறித்து அரசியல் தலைவர்கள் தங்களின் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க;- நடிகர்கள் அரசியலுக்கு வருவது தமிழ்நாட்டின் சாபக்கேடு! விஜய் ரசிகர்களை தெறிக்கவிடும் திருமாவளவன்!
இந்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் எம்.பி.யுமான திருமாவளவன் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போது;- நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதால் ஒன்றுமில்லை. நல்ல எண்ணத்தில் பெரியார், அம்பேத்கரை மாணவர்கள் படிக்க வேண்டும் என்று அவர் கூறியிருப்பதை வரவேற்கிறோம். யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் பொது வாழ்வுக்கு வரலாம். ஆனால் மக்களுக்காக நல்லது செய்ய வேண்டும்.
இதையும் படிங்க;- அண்ணாநகர் ரமேஷ், சாதிக் பாட்சாவின் நிலை தனக்கு வந்து விடுமோ என்ற அச்சத்தில் செந்தில் பாலாஜி.?- செல்லூர் ராஜூ
பொதுவாக சினிமாவில் இருப்பவர்கள் புகழ் இருந்தால் போதும் முதல்வராகி விடலாம் என்ற எண்ணத்தோடு அரசியலுக்கு வருகின்றனர். தமிழகத்தில் மட்டுமே இந்த சாபக்கேடு இருக்கிறது. மற்ற மாநிலங்களில் திரையுலகத்தைச் சார்ந்தவர்கள் அவர்களது வேலையை மட்டுமே செய்கின்றனர் என திருமாவளவன் தெரிவித்திருந்தார். இந்நிலையில், திருமாவளவனை சீண்டும் வகையில் நாராயணன் திருப்பதி டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
சாபக்கேடு என்று சொல்கிற அளவிற்கு தைரியம் எங்கிருந்து வந்தது? அட.....அது கூட பரவாயில்லை! ஆனால், ஒட்டு மொத்தமாக திரை உலகத்தை சேர்ந்தவர்கள் என்று கூறி கருணாநிதியை கூட விட்டு வைக்காமல் திருமாவளவன் இப்படி விமர்சித்து விட்டாரே!!!
சரக்கிருக்கு, மிடுக்கிருக்கு என்கிறாரோ?
இதுதொடர்பாக தமிழக பாஜக மாநிலத் துணைத்தலைவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- உதயநிதி ஸ்டாலினை சாபக்கேடு என்று சொல்கிற அளவிற்கு தைரியம் எங்கிருந்து வந்தது? அட.....அது கூட பரவாயில்லை! ஆனால், ஒட்டு மொத்தமாக திரை உலகத்தை சேர்ந்தவர்கள் என்று கூறி கருணாநிதியை கூட விட்டு வைக்காமல் திருமாவளவன் இப்படி விமர்சித்து விட்டாரே!!! என