
தமிழக அரசு விவகாரங்களில் மத்திய அரசின் தலையீடு அதிகமாக உள்ளது என்றும், இந்த தலையீடு இல்லை என்றால் தமிழக அமைச்சர்கள் சிறப்பாக செயல்படுவார்கள் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த அரசு தவறிவிட்டது என குற்றம்சாட்டினார். அதே நேரத்தில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் பொறுப்பு தமிழக அரசுக்கு மட்டுமல்ல, மத்திய அரசுக்கும் உள்ளது என திருமாவளவன் தெரிவித்தார்.
தமிழக அரசியலில் மத்திய அரசின் தலையீடு அதிகமாக உள்ளது என்றும், இந்த தலையீடு இல்லை என்றால் தமிழக அமைச்சர்கள் சிறப்பாக செயல்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.
முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் டெங்கு காய்ச்சலையும் சேர்த்திருப்பது வரவேற்கத்தக்கது என்றும் தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.