எடப்பாடி சிறப்பாக ஆட்சி செய்கிறார்... தாறுமாறாக புகழும் திருமா!! கூட்டணிக்கு ஐஸ்?

Published : Dec 09, 2018, 11:04 AM ISTUpdated : Dec 09, 2018, 11:05 AM IST
எடப்பாடி சிறப்பாக ஆட்சி செய்கிறார்... தாறுமாறாக புகழும்  திருமா!! கூட்டணிக்கு ஐஸ்?

சுருக்கம்

ஆட்சியை தக்க வைத்து சிறப்பாக நடத்துகிறார், என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பாராட்டு தெரிவித்துள்ளார். 

தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த விசிக தலைவர் பட்டியலினத்தவர் அதிகாரப் பகிர்வு தொடர்பாக, வைகோ தெரிவித்த கருத்து வருத்தமளிப்பதாக திருமாவளவன் கூறினார். மேலும், வைகோ விவகாரம் தொடர்பாக, வி.சி.க. நிர்வாகி வன்னியரசு சமூக வலைத்தளத்தில் தெரிவித்த கருத்தை, நீக்குமாறு தான் அறிவுறுத்தியதால், அந்த பதிவு உடனடியாக  நீக்கப்பட்டது என்றும், அவர் கூறினார். 

மேலும், அந்த பதிவு தொடர்பான பின்னணியில், தான் இருப்பதாக மற்றவர்கள் கூறினாலும், வைகோ அவ்வாறு கூறியிருக்க மாட்டார், என கருதுகிறேன் என்றும், தான் அவ்வாறு செய்யக் கூடியவன் அல்ல, என்பது வைகோவுக்கு நன்றாக தெரியும், என்றும் திருமாவளவன் கூறியுள்ளார்.

மேலும், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை குறைத்து மதிப்பிட முடியாது என்றும், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஆட்சி கவிழ்ந்துவிடும் என பலரும் கூறிய நிலையில், ஆட்சியையும் கட்சியையும் திறம்பட நடத்துவதாகவும்  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, திருமாவளவன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே, தலைமைச் செயலகத்தில் தன்னைச் சந்தித்த திருமாவளவனிடம் நிறைய விஷயங்களைப் பேசியிருக்கிறார் எடப்பாடி. அப்போது தனது பர்சனல் செல் நம்பரைக் கொடுத்த எடப்பாடி, செகரட்டரி மூலமா பேச வேணாம். என்ன உதவி வேணும்னாலும், எப்ப வேணும்னாலும் என்கிட்ட பேசுங்க. கீழேயிருந்து வந்திருக்கும் என்னைப் போன்றவங்களுக்கு உங்க ஆதரவு வேணும்’ என்று வெளிப்படையாகவே பேசியிருக்கிறார். திருமாவளவனும் நன்றி சொல்லிவிட்டு வந்திருக்கிறார். தொடர்ந்து திருமாவை பிரைன் வாஷ் செய்துவருவதாக தெரிகிறது. 

அதேபோல ஸ்டாலினும் இவர் கடந்த தேர்தலில் மநகூ ஆரம்பித்ததைப் போல எந்த நேரத்திலும் காலை வாரி விடுவார் என்பதால் நம்புவதாக இல்லை, அதனால் இப்போதே அதிமுகவில் கூட்டணி ரிசர்வ் செய்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

PREV
click me!

Recommended Stories

ஓநாய்களிடம் சிறுபான்மையினர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்..! கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன இபிஎஸ்..!
125 நாள் வேலையை வரவேற்கிறோம்..! ஆனால்..? பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!