தமிழ்நாட்டில் இருந்தாலும் நாம தெலுங்கில் தான் பேசணும்… தெலுங்க மறந்திடாதீங்க… தமிழக அமைச்சரின் சர்ச்சைப் பேச்சு !!

By Selvanayagam PFirst Published Dec 9, 2018, 8:06 AM IST
Highlights

கோவில்பட்டியில் நடைபெற்ற கம்மவார் மகாஜன சங்க கூட்டத்தில் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜு , நாம் தமிழ்நாட்டில் வாழ்ந்தாலும் வீட்டில் தெலுங்கில்தான் பேச வேண்டும் என்றும், எங்கு சென்றாலும் தெலுங்கை மறந்துவிடக்கூடாது என்றும் தெரிவித்தார்.

தமிழ்நாட்டை ஒரு தமிழன்தான் ஆள வேண்டும், தமிழர்கள் தமிழில்தான் பேச வேண்டும் என யாராவது குரல் கொடுத்தால், அவரை ஒரு குறுகிய வட்டத்துக்குள் அடைத்து, இவன் பிரிவினைவாதி, ஆண்ட்டி இந்தியன், இறையாண்மைக்கு எதிரானவன் என்று கூறி அவர் மீது தீவிரவாத முத்திரை குத்தி அய்யோ அம்மா என்று சிலர் இங்கு கூப்பாடு போடுவதைப் பார்த்திருக்கிறோம்.

அதே நேரத்தில் வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் யாராவது தங்களது தாய் மொழி குறித்து இங்கு சிலாகித்து பேசி விட்டால் அது அவரது உரிமை என்று சப்பைக்கட்டு கட்டுவார்கள் அந்த தேசியவாதிகள். இந்த நிலைமை மாற வேண்டும் என்பது தான் தமிழ் ஆர்வலர்கள் கருத்தாக உள்ளது.

இதனிடையே இது போன்றதொரு சர்ச்சைப் பேச்சில் சிக்கியிருக்கிறார் அமைச்சர் கடம்பூர் ராஜு. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில்  கம்மவார் மகாஜனசங்கம் சார்பில் ஒரு விழா நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில்  தெலுங்கு சமூகத்தைச் சேர்ந்த கடம்பூர் ராஜு பங்கேற்று தமிழில் பேசினார்.

அவர் பேசும்போது கோவில்பட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான தெலுங்கு பேசும் மக்கள் இருக்கிறார்கள்.  நாம் வெளியில் தமிழ்ல் பேசினாலும், வீட்டுக்குள் தெலுங்கில்தான் பேச வேண்டும் என தெரிவித்தார்.

ஆனால் இந்தப் பகுதியில் இருந்து சென்னை உள்ளிட்டபெரிய நகரங்களுக்கு செல்லும்  தெலுங்கு பேசும் மக்கள் அங்கு போனவுடன் தெலுங்கை மறந்துவிடுவதாக வேதனை தெரிவித்தார். நமது கலாச்சாரம் பாதுகாக்கப்படவேண்டும் என்றால் இனி வீடுகளில் தெலுங்கில்தான் பேச வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

தமிழ்ல பேசுன்னு தமிழன் சொல்லிட்டா . சாதி வெறியன், மொழி வெறியன், பிரிவினைவாதின்னு முத்திரை குத்தும் இந்த தேசியவாதிகள் இதற்கு என்ன சொல்லப் போகிறார்கள் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

click me!