இந்தியாவின் பெயரை மாற்றுவது தான் ஆர்எஸ்எஸ்யின் செயல்திட்டம். வர போகிற நாடாளுமன்ற தேர்தலில் நாம் எச்சரிக்கையாக இருந்தால் அவர்களை நாம் ஆட்சியில் இருந்து தூக்கி எறிய முடியும் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இருந்து தான் முதல் குரல்
சென்னை வள்ளுவர்கோட்டத்தில் குலத்தொழிலை ஊக்குவிக்கும் விஸ்வகர்மா யோஜனா திட்டத்தை கண்டித்து திக,திமுக , விசிக, காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்டு கட்சிகள் உள்ளிட்ட அனைத்து கட்சிகள் பங்கேற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், விஸ்வகர்மா யோஜனா என்கிற இந்த திட்டம் மிகவும் ஆபத்தானது சாதிய கட்டமைப்பை நிலைப்படுத்துவதற்கான ஒரு முயற்சி ஆகவே இந்த திட்டத்தை எதிர்த்து வருகிறோம். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இந்த திட்டத்திற்கு எதிரான குரல் ஒலிக்கவில்லை தமிழகத்தில் தான் முதல் குரல் வள்ளுவர் கோட்டத்தில் இருந்து ஒழிக்க தொடங்கி இருக்கிறது.
இந்தியா கூட்டணியை ஒருங்கிணைத்த ஸ்டாலின்
கடந்த சில நாட்களாக இந்த சனாதன தர்மம் குறித்த உரையாடல் விவாதம் நாடு தழுவிய விவாதமாக மாறி இருக்கிறது. இந்தியா என்கிற கூட்டணிக்குள் ஒரு குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் அவர்களின் நோக்கம். திமுக இந்தியா கூட்டணியை உருவாக்கியது முதன்மையான இயக்கம் என்பதை நாடு அறியும் திமுக தலைவர் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் மிகுந்த பொறுப்புணர்வோடு எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கிற பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வந்ததன் விளைவாகத்தான் இந்த ஒரு சூழல் கனிந்திருக்கிறது. இந்தியா என்கிற கூட்டணி உருவாவதற்கான சூழல் பணிந்து இருக்கிறது. ஆகவே அவர்களுக்கு ஆத்திரம் திமுக மீது தான் தமிழக முதல்வர் மீது தான்.
சனாதனம் என்பது பயங்கரவாதம்
பெரும்பான்மை இந்துக்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும் இது திமுகவுக்கு எதிரானது என்பதை விட இந்துக்களின் நம்பிக்கையை வஞ்சகமாக ஏமாற்றி இந்துக்களை ஏமாற்றி மயக்கி தம்வயப்படுத்தி வாக்கு வங்கிக்கு திரட்டி கொள்வதற்கான ஒரு முயற்சி. இந்துக்களை ஏமாற்றுவதற்கான முயற்சி. 100 விழுக்காடு வாக்கு வங்கி அரசியலுக்கான வேலை திட்டம். எனவே இந்துக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இது பற்றி அம்பேத்கர் தம் இறுதி மூச்சு வரை பேசியுள்ளார். சனாதனம் என்பது பயங்கரவாதம் என்று உதயநிதியின் தலையை சீவ 10 கோடி அறிவித்ததிலிருந்து தெரிகிறது. ராஜாஜி கொண்டு வந்தது குலக்கல்வி. இவர்கள் கொண்டு வருவது குலத்தொழில். அது அப்படியே நிலைப்படுத்த வேண்டும் என அவர்கள் ஏன் நினைக்கிறார்கள்.
அதிமுகவை பாஜக விழுங்கும்
நாங்கள் சமத்துவத்திற்காக போராடுகிறோம். நீங்கள் சமத்துவமின்மைக்கு போராடுகிறீர்கள்.நாங்கள் ஜனநாயகத்திற்காக போராடுகிறோம். நீங்கள் சனாதனத்திற்காக போராடுகிறீர்கள். இதற்கு வேறுபாடுகள் உண்டு. இந்தியா கூட்டணியை யாராலும் சிதைக்க முடியாது. திமுக இல்லாமல் இந்தியா கூட்டணி இல்லை. இந்த சூழலில் தான் நாம் அனைவரும் விழிப்பாக இருக்க வேண்டும். இந்தியாவின் பெயரை மாற்றுவது தான் ஆர் எஸ்எஸ்யின் செயல்திட்டம்.
வர போகிற நாடாளுமன்ற தேர்தலில் நாம் எச்சரிக்கையாக இருந்தால் அவர்களை நாம் ஆட்சியில் இருந்து தூக்கி எறிய முடியும். தமிழ்நாடு முதலமைச்சர் அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். இந்த தேர்தலோடு அதிமுக எங்கு காணமல் போகும் என்றே தெரியவில்லை. பாரதிய ஜனதா கட்சி அதிமுகவை விழுங்கிவிடும். பிஜேபி தான் 2 வது இடத்தில் உள்ள எதிர்கட்சி போல் நடந்து வருகிறது என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்
அதிமுக, பாஜக கூட்டணி கணவன், மனைவி போன்றது; தினமும் ஐ லவ் யூ சொல்ல முடியாது - எச்.ராஜா