ஆளுநர் ரவியின் அறிவிப்பு தன்னிச்சையானது... விதிகளுக்கு முரணானது.. சட்டப்படி எதிர்கொள்வோம்- சீறும் பொன்முடி

By Ajmal Khan  |  First Published Sep 7, 2023, 7:46 AM IST

சென்னை பல்கலைக்கழகம், உள்ளிட்ட மூன்று பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தரை நியமனம் செய்ய தேடுதல் குழுவை அமைத்து ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில், ஆளுநர் அறிவிப்பு மரபு மற்றும் விதிகளுக்கு முரணானது என தெரிவித்துள்ள அமைச்சர் பொன்முடி சட்டப்படி எதிர்கொள்வோம் என கூறியுள்ளார். 
 


துணை வேந்தர்- தேடுதல் குழு

சென்னை பல்கலைக்கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம் ஆகிய மூன்று பல்கலைக்கழகங்களில் துணைவேந்தரை நியமனம் செய்ய தேடுதல் குழுவை அமைத்து ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஆளுநர் ரவி தன்னிச்சையாக அறிவிப்பு வெளியிட்டுள்ளதாக அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார். இந்தநிலையில் இது தொடர்பாக அமைச்சர் பொன்முடி வெளியிட்ட அறிக்கையில்,

Tap to resize

Latest Videos

தமிழ்நாட்டில் உயர்கல்வி துறையின் கீழ் 13 பல்கலைக்கழகங்கள் இயங்கி வருகின்றன. இப்பல்கலைக்கழகங்களுக்கென தனித்தனியே சட்டம் மற்றும் விதிகள் உள்ளன. இவற்றின்படி துணை வேந்தரின் பதவிக்காலம் முடிந்தவுடன் அதனை நிரப்ப தேடுதல் குழு அமைக்கப்பட்டு அதன்மூலம் துணைவேந்தர் தேர்வு செய்யப்பட்டு நியமனம் செய்யப்படுவார். 

துணை வேந்தர் தேர்வு

உயர்கல்வித் துறையின் கீழ் இயங்கும் பல்கலைக் கழக சட்டவிதிகளில், ஆளுநர், துணை வேந்தரை தேர்வு செய்யும் தேர்வுக்குழுவினை அமைக்க இல்லை. பாரதியார் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் பதவிக்காலம் 17.10.2022 அன்றும். ஆசிரியர் கல்வியியல் 30.11.2022 அன்றும் பல்கலைக்கழகத்தில் முடிவடைந்ததால், துணைவேந்தர் தேடுதல் குழு பதவிக்காலம் உறுப்பினர்கள் அந்தந்த பல்கலைக்கழகங்களின் விதிகளின்படி நியமனம் செய்யப்பட்டு. ஆளுநரின் ஒப்புதலோடு தமிழ்நாடு அரசிதழில் முறையே 20.09.2022 மற்றும் 19.10.2022 அன்று அறிவிக்கை வெளியிடப்பட்டது.

ஆளுநரின் தன்னிச்சையான நடவடிக்கை

இதுவரையில் எந்த ஒரு ஆளுநரும் தன்னிச்சையாக தேடுதல் குழுவினை அமைத்ததில்லை. அதற்கு விதிகளில் வழிவகையும் இல்லை. தேர்வுக்குழு குறித்த விவரங்களை அரசு தான் அரசிதழில் வெளியிடும். இதுநாள் வரையிலும் தேடுதல் குழு உறுப்பினர்கள் அந்தந்த பல்கலைக்கழக சட்டவிதிகளின்படி நியமிக்கப்பட்டு அரசாணை வெளியிட்டு அரசிதழில் அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் தற்போது ஆளுநர் அவர்கள் நடைமுறையில் உள்ள பல்கலைக்கழக சட்ட விதிகளுக்கு எதிராக தேடுதல் குழுவை தன்னிச்சையாக முடிவு செய்து அறிவிக்கை வெளியிட்டுள்ளார்.

ஆளுநரால் அமைக்கப்பட்டுள்ள இந்த தேடுதல் குழு முழுக்க முழுக்க பல்கலைக்கழக சட்டம் மற்றும் விதிமுறைகளுக்கு மாறானது. அரசிதழில் அறிவிக்கை வெளியிடப்பட அரசின் அலுவல் விதிகளின்படி வேண்டும். ஆனால் ஆளுநர் தன்னிச்சையாக அறிவிக்கை வெளியிட்டது. மரபு மற்றும் விதிகளுக்கு முரணானது.

சட்டப்படி எதிர்கொள்வோம்

தெலுங்கானா மற்றும் குஜராத் மாநில பல்கலைக்கழகங்களில் உள்ளது போல் பல்கலைக்கழக துணைவேந்தரை தெரிவு செய்யும் அதிகாரம் அரசுக்கு அளிக்க வழிவகை செய்யும் சட்ட மசோதா சட்டமன்ற பேரவையில் 25.04.2022 அன்று நிறைவேற்றப்பட்டு. 28.04.2022 அன்று ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், இது நாள்வரையில் மேற்படி மசோதாவிற்கு ஆளுநரிடமிருந்து ஒப்புதல் பெறப்படவில்லை. ஆளுநர் தன்னிச்சையாக பாரதியார், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் மற்றும் சென்னை பல்கலைக்கழகங்களின் துணைவேந்தரை தெரிவு செய்வதற்கான தேடுதல்குழுவை அமைத்து வெளியிடப்பட்ட அறிக்கையினை அரசு சட்டப்படி எதிர்கொள்ளும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். 

இதையும் படியுங்கள்

மூன்று பல்கலைகளுக்கு துணைவேந்தர் நியமனம் செய்ய குழு! அதிரடியாக அறிவித்த ஆளுநர் ஆர்.என்.ரவி!

click me!